fbpx

சோனியா காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? அட இது புதுசா இருக்கே..!! வேட்புமனுவில் தகவல்..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ராஜஸ்தானில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சோனியா காந்தியின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இம்முறை சோனியா காந்தி மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தகவல் வெளியானது. அவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் போட்டியிடவில்லை என்று அவரே கூறினார். இதுவரை அவர் போட்டியிட்ட உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் இம்முறை பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

அதேபோல் சோனியா காந்தி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ராஜஸ்தானில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சோனியா காந்தி தனது சொத்து விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார். சோனியா காந்திக்கு இத்தாலியில் உள்ள அவரது பூர்வீக சொத்தில் ஒரு பங்கு உள்ளது எனவும், அந்த சொத்தின் மதிப்பு ரூ.27 லட்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த சொத்துகளில் இருந்து சோனியா காந்திக்கு வருமானம் வந்துக் கொண்டிருக்கிறது என்றும், இதற்காக ரிசர்வ் வங்கியிடமும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இது தவிர ரூ.12.53 கோடி சொத்து மதிப்பு உள்ளதாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். இதனைப் பற்றி விரிவாக குறிப்பிட்டிருந்த சோனியா காந்தி, கடந்த 5 வருடங்களில் சொத்து மதிப்பில் ரூ.72 லட்சம் வருமானம் மூலம் அதிகரித்துள்ளதாகவும், 1. 267 கிலோ தங்கம் மற்றும் 88 கிலோ வெள்ளி ஆகியவையும் உள்ளன என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், டெல்லியில் ரூ.5.88 கோடி மதிப்பில் விவசாய நிலமும் உள்ளது. அதுபோக எம்.பி. சம்பளம், வங்கியில் இருக்கும் இருப்புத்தொகை, மியூச்சுவல் பண்ட் டிவிடண்ட், புத்தகங்களுக்கான ராயல்டி ஆகியவற்றின் மூலமும் வருமானம் வந்து கொண்டிருக்கிறது.

மேலும், தனக்கு எந்த காரோ அல்லது வேறு எந்த விதமான வாகனமோ இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு சோனியா காந்தியின் மக்களவைத் தேர்தல் பிராமணப் பத்திரத்தில், இத்தாலியில் உள்ள பூர்வீக சொத்துப் பற்றி எந்த தகவலையும் அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

”அதை ரத்து செய்ததால் எங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை”..!! திமுகவை டார்கெட் செய்து அண்ணாமலை பரபர பேட்டி..!!

Fri Feb 16 , 2024
சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு முன்பாக, என் மண் என் மக்கள் யாத்திரை 234 தொகுதிகளிலும் முடித்திருப்போம். சென்னையில் காவல்துறை அனுமதி இல்லை. எனவே, இங்குள்ள 20 தொகுதிகளில் மட்டும் மக்களை உள் அரங்கு கூட்டங்களில் சந்தித்து வருகிறோம். இந்த யாத்திரையின் இறுதி நிகழ்வு பல்லடத்தில் நடைபெறவுள்ளது” என்றார். அப்போது நடிகை கௌதமி அதிமுகவில் இணைந்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு […]

You May Like