fbpx

வாழை, கொட்டுக்காளி திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..? அடேங்கப்பா இத்தனை கோடியா..?

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை பெற்றதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருந்தது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘வாழை’ திரைப்படமும், ‘கொட்டுக்காளி’ திரைப்படமும் ஒரே நாளில் வெளியானதால், வாழை திரைப்படத்தை விடவும், கொட்டுக்காளி திரைப்படம் வசூல் ரீதியாக சற்று பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சூரி – அன்னா பென் ஆகியோரது நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது.

படத்தில் பின்னணி இசையே இல்லாமல் காட்சியின் ஒலியுடன் புதுமையான முயற்சியில் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில், கொட்டுக்காளி திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், முதல் நாளில் ரூ. 43.56 லட்சம் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்தியளவில் முதல் நாளில் வாழை திரைப்படம் ரூ. 1.15 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Read More : மின்வாரியத்தில் வந்த அதிரடி மாற்றம்..!! இனி எல்லாமே செல்போனில் தான்..!! என்ன தெரியுமா..?

English Summary

While the film Kotukkali has released across Tamilnadu, on the first day it collected Rs. 43.56 lakh has been collected.

Chella

Next Post

என்னிடம் விசாரணையா..? என் வாழ்நாளில் இப்படி நடந்ததே இல்லை..!! இயக்குனர் நெல்சன் விளக்கம்..!!

Sat Aug 24 , 2024
Reports that Armstrong was being investigated by the police for his murder are untrue.

You May Like