fbpx

நாட்டாமை ’மிக்சர் மாமா’ கேரக்டர் உருவானது எப்படி தெரியுமா..? சுவாரஸ்ய தகவலை சொன்ன கே.எஸ்.ரவிக்குமார்..!!

இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில், “நாட்டாமை” திரைப்படத்தில் இடம் பெற்ற மிக்சர் மாமா கேரக்டர் எப்படி உருவானது என்பது பற்றிய ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் ஒரு சில திரைப்படங்களில் இடம் பெற்ற காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் அதனாலேயே மக்கள் மத்தியில் பல வருடங்கள் கழித்தும் பேசப்படும். ஆனால், அந்த காட்சிகள் உருவான விதம் எதார்த்தமானதாகவும், யாரும் எதிர்பார்க்காத விதத்திலும் தான் நடந்திருக்கும். அந்த வகையில், நாட்டாமை திரைப்படத்தில் இடம்பெற்ற மிக்சர் மாமாவை யாராலும் மறக்க முடியாது.

அந்த படத்தில் நடிகர் சரத்குமார் கதாநாயகனாக நடித்திருப்பார். அவரோடு கவுண்டமணி-செந்தில் காமெடி கேரக்டரில் நடித்திருப்பார்கள். அந்த திரைப்படத்தில் செந்தில் கவுண்டமணிக்கு அப்பாவாக நடித்திருப்பார். அப்போது தன்னுடைய மகன் செந்திலுக்கு பெண் பார்க்க போன இடத்தில் அந்தப் பெண்ணின் அம்மா செந்திலின் முன்னாள் காதலி என்பதும், கவுண்டமணி பொண்ணு பார்க்க போயிருந்த பொண்ணு செந்திலின் மகள் கவுண்டமணியின் தங்கை என்பதும் தெரியவரும்.

அப்போது அவ்வளவு பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போது அங்கு ஒரு நபர் மிச்சர் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அப்போது கவுண்டமணி, இவ்வளவு அமளிதுமளி நடக்கும் போதும் இவன் யாரு நடு வீட்டுல மிச்சர் சாப்பிட்டுட்டு இருக்கிறான்’ என்று சொல்லுவார். இந்த காட்சி அந்த நேரத்தில் அதிகமாக கவரப்பட்டது. தற்போது வரை பல மீம்ஸ்களில் அவருடைய புகைப்படம் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் கே.எஸ்.ரவிக்குமார் அந்த கேரக்டர் உருவான விதம் குறித்து பேசியிருந்தார்.

அதாவது, அந்த கேரக்டரில் நடித்த நபர் எலக்ட்ரிசனாக வேலை பார்த்து இருக்கிறார். லைட் முன்னாடி உட்கார்ந்து இருக்கும் அந்த நபர் கே.எஸ்.ரவிக்குமார் ஐந்தாவது லைட் சுச்சி போடு என்றால் போடுவாராம் பிறகு ஏழாவது லைட்டை சுச்சி போடு என்றால் போடுவாராம். வேறு எங்கேயும் செல்லாமல், எந்த வேலையும் செய்யாமல் ஒரே இடத்தில் இவர் அமர்ந்திருப்பதால் கே.எஸ்.ரவிக்குமார் அவரை பார்க்கும் போதெல்லாம் இப்படியே உட்கார்ந்து இருக்கிறியே கொஞ்சம் எழுந்து போய் அந்த லைட்டை மாத்தி வைக்கலாமே என்று கேட்க, அதெல்லாம் என்னுடைய வேலை கிடையாது சார். நான் எலக்ட்ரீசியன்… எலக்ட்ரீசியனுக்குள்ள வேலையை தான் செய்வேன் என்று சொல்லி விடுவாராம்.

இதை ரவிக்குமார் மனதிற்குள்ளேயே வைத்திருக்கிறார். பிறகு இந்த காட்சி படம் படமாக்கப்படும் போது மிச்சர் சாப்பிடும் கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது இவருடைய முகம் ஞாபகம் வந்திருக்கிறது. உடனே அவரை அழைத்து உனக்கு ஒரு கேரக்டர் தருகிறேன். நீ டிரஸ் மாத்திட்டு வா என்று சொல்ல அவரும் வந்திருக்கிறார். பிறகு அவருக்கு பட்டையை போட்டு கையில் மிச்சர் தட்டையும் கொடுத்து நான் உனக்கு டேக் சொன்னதும் நல்லா வாயை அங்கேயும் இங்கேயும் அசைத்து மிச்சர் சாப்பிடு அது மட்டும் போதும் என்று சொன்னாராம். ரவிக்குமார் சொன்னது போலவே அவரும் செய்திருக்கிறார். பிறகு திரைப்படம் வெளியானதும் அவருக்கு கிடைத்த விளம்பரத்தை பார்த்து அவர் கையில் தாம்பூல தட்டோடு வந்து வீட்டில் பார்த்தார். இப்ப வரைக்கும் பல மீம்ஸ்களில் அவர் புகைப்படம் இருக்கிறதை பார்த்திருக்கிறேன் என்று கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார்.

Read More : ஆசிரியர்களே..!! சொந்த ஊரில் பணியாற்ற வேண்டுமா..? விண்ணப்பிக்க இன்னும் சில மணி நேரம் தான் இருக்கு..!!

English Summary

In a recent interview, director and actor KS Ravikumar shared the secret of how the character of Mixer Mama in the film “Nathamai” came about.

Chella

Next Post

போக்குவரத்து துறை Vs போலீஸ் துறை..! உள்துறை & போக்குவரத்து செயலாளர் திடீர் ஆலோசனை!!

Sat May 25 , 2024
போக்குவரத்து துறைக்கும், காவல்துறைக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்த பிரச்னைக்கு தீர்வுகாண, தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து செயலாளர் பணிந்தீரரெட்டி உடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என கூறி வாக்குவாதம் செய்தார்.இது தொடர்பான வீடியோ […]

You May Like