ஒரு விவசாய நிலத்தினையோ, காலி இடத்தையோ அல்லது கட்டிடத்துடன் கூடிய இடத்தை விற்பனை செய்யவோ அல்லது வாங்குவதற்கோ பட்டா சிட்டா கண்டிப்பாக தேவைப்படுகிறது. பட்டா சிட்டாவை வைத்தே ஒரு நிலத்தை வாங்கவோ விற்பனை செய்யவோ முடியும். தமிழ்நாட்டில் நில உடைமைக்கான ஆவணமாக பட்டா சிட்டா உள்ளது. வங்கிகள் மூலம் சொத்தின் பேரில் கடன் பெறுவதற்கு பட்டா சிட்டா ஆவணம் தேவைப்படுகிறது.
சொத்தின் உரிமை, சொத்தின் அளவு, சொத்து அமைந்துள்ள இடம் போன்றவற்றை கொண்டே கடன் பெறும் தகுதியை முடிவு செய்கிறார்கள். விவசாயம் நிலம் மற்றும் விவசாயாம் செய்து இயற்கை அழிவுகளால் பாதிப்பு அடைந்தாலோ, நிலத்தினை அரசு உபயோகத்திற்காக எடுத்துக் கொண்டாலோ அதற்கான இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கு பட்டா – சிட்டா ஆவணம் முக்கியமான ஆவணமாக தேவைப்படுகிறது
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி..?
* பட்டா சிட்டா ஆன்லைன் பெற வேண்டிய அரசின் அதிகாரபூர்வ வலைதளம் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
* பட்டா & புலப்படம் / சிட்டா / நகர நில அளவைப் பதிவேடு விவரங்களை பார்வையிடுவதற்கான ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
* இப்போது தோன்றும் பக்கத்தில் கீழ்கண்ட தேர்வுகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
* அதில், மாவட்டம், வட்டம், கிராமம், பட்டா /சிட்டா விவரங்களை பார்வையிட அங்கீகார மதிப்பை உள்ளிடவும்.
* பின்னர், செல்போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும்.
* பின்னர், அதற்கு OTP வரும். அதனை உறுதிப்படுத்த வேண்டும்.
* இவை அனைத்தையும் பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். பின்னர் உங்களது உள்ளீடு தரவுகள் இயக்கப்பட்டு அதற்கான சிட்டா தோன்றும்.
* சிட்டா சான்றினை சரிபார்த்த பின், அதன் கீழ் உள்ள “Print” பொத்தானை அழுத்த வேண்டும். இப்பொழுது சிட்டவை PDF தரவாக சேமிக்கலாம் அல்லது அச்சிட்டு கொள்ளலாம்.