fbpx

இந்த 3 பொருட்களையும் உங்கள் ஹேண்ட் பேக்கில் வைத்திருந்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா.?

நாம் ஒவ்வொருவரும் வெளியில் செல்லும்போது ஹேண்ட் பேக் கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டிருப்போம். அவற்றில் நமது செல்போன்கள் மேக்கப் சாதனங்கள் மற்றும் நமக்கு மிக முக்கியமான அத்தியாவசிய பொருட்களை வைத்திருப்போம். இவற்றுடன் மிக முக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டிய மூன்று பொருள்கள் பற்றி சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த மூன்று முக்கியமான பொருட்களும் நமது ஹேண்ட் பேக்கில் இருந்தால் நமக்கு கிடைக்கப் போகும் நன்மைகள் என்ன.? மற்றும் அந்த மூன்று பொருட்கள் எவை.?என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

நமது சமையலில் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படும் ஏலக்காய் கிராம்பு மற்றும் மிளகு இந்த மூன்றும் தான் நமது ஹேண்ட் பேக்கில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பொருள்களாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த மூன்று பொருட்களையும் ஒற்றைப்படை இலக்கங்களில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறது. அதாவது 9 மிளகு 9 ஏலக்காய் மற்றும் 9 கிராம்பு என்ற வீதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை நமது ஹேண்ட் பேக்கில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

ஒன்பது கிராம்பை வைத்திருப்பதன் மூலம் எதிர்மறை சக்திகளில் இருந்து நமக்கு பாதுகாப்பு கிடைப்பதோடு கண் திருஷ்டி ஏற்படுவதும் தடுக்கப்படுவதாக தெரிவிக்கிறது. ஏலக்காய் நமக்கு செல்வ வளத்தை கொடுக்கிறது. மிளகு பொறாமை போன்ற தீய சக்திகளில் இருந்து நம்மை காக்கிறது. இதன் காரணமாக இந்த மூன்று பொருட்களையும் எப்போதும் நமது ஹேண்ட் பேக்கில் வைத்திருக்க வேண்டும். இவற்றின் காரணமாக நாம் செல்லும் இடங்களில் இருக்கும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கப்படுகிறோம்.

மேலும் இவை நம்மை தீய சக்திகளில் இருந்து பாதுகாப்பதோடு எதிர்மறை எண்ணங்களில்இருந்தும்
தடுக்கிறது. எனவே இவற்றை எப்போதும் கைகளில் வைத்திருக்க வேண்டும். இது போன்ற சிறிய செயல்களின் மூலம் நமது பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு செல்வ வளமும் அதிகரிக்கிறது.

Next Post

தொங்கும் தொப்பையை குறைக்கனுமா.? நம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் குடம்புளி ஒன்றே போதும்.!

Thu Nov 30 , 2023
நமது சமையல் முறையில் புளி என்றுமே முக்கிய இடம் வைக்கிறது. குறிப்பாக மீன் குழம்பு சாம்பார் மற்றும் ரசம் ஆகியவற்றில் புளியின் பங்கு இன்றியமையாதது. எனினும் நம் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் புளியை விட கேரளாவில் பயன்படுத்தப்படும் குடம்புளி ஏராளமான மருத்துவ நன்மைகளைக் கொண்டு இருக்கிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றின் நன்மைகள் என்ன என்று பார்ப்போம். குடம்புளி ஜீரண உறுப்புகள் மற்றும் குடலின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆயுர்வேத […]

You May Like