fbpx

பொன்னியின் செல்வன் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா..? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..

மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார்.. சோழர்களின் வரலாற்றை பேசும், கல்கி கிருஷ்ண மூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படைக் கொண்டு, பீரீயாடிக்கல் – ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ், நிஷல்கல் ரவி, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, மற்றும் மோகன் ராமன் உள்ளிட்ட பல நடிகர்கள் உள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.. இப்படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது..

படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில் பொன்னியின் டீசர், பொன்னி நதி, சோழா ஆகிய பாடல்களுக்கு ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ரன்னிங் டைம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.. அதன்படி, இப்படம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடும் என்று கூறப்படுகிறது..

இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கும் மூன்றாவது பாடல் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உறுதிப்படுத்தினார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 6-ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பை படக்குழுவினர் மிக விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Maha

Next Post

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.120 குறைவு.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்

Sat Aug 27 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38,440-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து […]

You May Like