மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியைச் சேர்ந்த பாஜக எம்.பி அனில் ஃபிரோஜியா, நாடாளுமன்றத்துக்கு தனது குடும்பத்தினருடன் பிரதமரை சந்தித்தார்.. அப்போது எம்.பியின் மகளுடனான உரையாடல் மிகவும் சுவாரஸ்யமானதாக மாறியது.. எம்பியின் 5 வயதாகும் மகள் அஹானா ஃபிரோஜியாவிடம் தான் யார் என்று தெரியுமா என்று கேட்டார்.. அதற்கு, “ஆம், நீங்கள் மோடி ஜி என்று எனக்குத் தெரியும். நீங்க தினமும் டிவியில் வருகிறீர்கள் என்று அக்குழந்தை பதில் கூறியது..
இதைத் தொடர்ந்து, பிரதமர் அவரிடம், “நான் என்ன செய்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டதற்கு, நீங்கள் மக்களவையில் வேலை செய்கிறீர்கள் என்று பதில் தெரிவித்தது..
இதைக் கேட்டு, பிரதமர் மோடி உள்ளிட்ட அறையில் இருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்ததால் அங்கு சிரிப்பலை எழுந்தது.. மேலும் அறையை விட்டு வெளியே செல்லும் முன் பிரதமர் மொடொஇ சிறுமிக்கு சாக்லேட் கொடுத்தார்.
இதுகுறித்து அனில் ஃபிரோஜியா தனது ட்விட்டர் பக்கத்தில் குடும்பத்தினர் பிரதமர் மோடியை தொடர்ச்சியாக ட்விட்டரில் சந்தித்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார், “இன்று மறக்க முடியாத நாள். உலகின் மிகவும் பிரபலமான தலைவரும், நாட்டின் வெற்றிகரமான பிரதமரும், மிகவும் மரியாதைக்குரியவருமான நரேந்திய மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அவரது ஆசீர்வாதத்தையும் பொதுமக்களுக்கு தன்னலமற்ற சேவையின் மந்திரத்தையும் பெற்றேன்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டிற்காக அர்ப்பணித்த, கடின உழைப்பாளி, நேர்மையான, தன்னலமற்ற மற்றும் தியாகம் மிக்க பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் பொதுமக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் நான் அதிர்ஷ்டசாலி.. “இன்று எனது மகள்கள், இளைய பெண் அஹானா மற்றும் மூத்த பெண் பிரியன்ஷி இருவரும் மரியாதைக்குரிய பிரதமரை நேரடியாகச் சந்தித்து அவரது பாசத்தைப் பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் உள்ளனர்” என்றும் அவர் கூறினார்.