தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக வந்து பின் தொகுப்பாளராக “அது இது எது” நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கிய விதம் இயக்குனர் பாண்டிராஜிற்கு பிடித்து போக சிவகார்த்திகேயனை “மெரினா” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அதன் பின் தொடர்ந்து படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் தற்போது தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் சினிமா சார்ந்து ஒரு தொழில் தொடங்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. சென்னையில் சிவகார்த்திகேயன் திரையரங்குகளை துவங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து சிவகார்த்திகேயன் (ASK) ஏசியன் சிவகார்த்திகேயன் சினிமாஸ் என்ற திரையரங்கை துவங்க உள்ளாராம். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இதை பற்றிய அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.