fbpx

உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி எங்கு இருக்கு தெரியுமா..? சுவாரஸ்ய தகவல்..!!

இமாச்சலப் பிரதேசத்தின் எல்லை மாவட்டமான லாஹவுல் மற்றும் ஸ்பிதி பள்ளத்தாக்கில் 15,256 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான வாக்குச் சாவடியைக் கொண்ட தாஷிகாங் என்கிற கிராமம் உள்ளது. இந்தியா – சீனா எல்லையில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த வாக்குச்சாவடி தாஷிகாங் மற்றும் கெட்டே ஆகிய 2 கிராமங்களை மட்டுமே உள்ளடக்கியது.

இந்த கிராமங்களில் மொத்தம் 75 பேர் வசிக்கின்றனர். அதில், 30 ஆண்கள் மற்றும் 22 பெண்கள் என 52 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். ஸ்பிதி பகுதி ஒரு கடுமையான குளிர் பாலைவன பள்ளத்தாக்கு ஆகும். இது கிழக்கில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திய தன்னாட்சிப் பகுதியின் எல்லையாக உள்ளது. இந்த பள்ளத்தாக்கில் மொத்தம் 29 வாக்குச் சாவடிகள் உள்ளன.

இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை, மாநிலத்தில் ஒரே கட்டமாக ஜூன் 1ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸின் விக்ரமாதித்ய சிங்கை எதிர்த்து பாஜக வேட்பாளரும் நடிகையுமான கங்கனா ரணாவத் களம் காண்கிறார்.

Read More : ‘2026இல் நம்ம ஆட்சி தான்’..!! ‘இபிஎஸ் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை’..!! ஓபிஎஸ் தடாலடி..!!

Chella

Next Post

’கால் வைக்கிற இடம் எல்லாம் கன்னி வெடியா இருக்கே’..!! அஜித்தால் டென்ஷனான சீனியர் சிட்டிசன்..!!

Fri Apr 19 , 2024
கால் வைக்கிற இடம் எல்லாம் கன்னி வெடி இருந்தால் எப்படி என்று வடிவேலு புலம்புவார். அஜித்துக்கும் சொந்த வாழ்க்கையில் அப்படி ஒரு நிலைமைதான். அவர் என்ன செய்தாலும், அது கடைசியில சர்ச்சையில் தான் போய் முடியுது. நமக்கு எதுக்கு வம்பு என்று அமைதியா வீட்டில் இருந்தால் கூட, இவர் ஏன் அமைதியா இருக்கார்னு ஒரு 10 பேர் கூட்டம் போட்டு விவாதிக்கிறாங்க. அப்படி அசைபோடுற வாய்க்கு இன்னைக்கு அவல் கிடைத்த […]

You May Like