fbpx

இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தில் கீழ் அடுக்குகளில் கீழ் திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்..

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.. வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.. நகரின் ஒரு சில இடங்களில் லேலான மழை பெய்யக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

போரில் 262 விளையாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.. உக்ரைன் விளையாட்டு அமைச்சர் தகவல்..

Sun Apr 2 , 2023
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.. இதுவரை இருநாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் போரை நிறுத்துவதற்கான எந்த சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை.. இதன் காரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான அகதிகள் நெருக்கடியாக இந்த போர் பார்க்கப்படுகிறது. இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், 13 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். எனினும் போர் தொடர்ந்து வருகிறது.. இந்நிலையில் […]

You May Like