fbpx

பிரஷர் குக்கரில் எந்த உணவுகளை சமைக்கவே கூடாது தெரியுமா..? உடலுக்கு கேடு விளைவிக்கும்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் நம் வீட்டு சமையல் அறையிலும் பல நவீன பொருட்கள் வந்துவிட்டன. அந்த காலத்தில் மண் பானை சமையல், விறகு அடுப்பு சமையல் என பல வகையான சமையல் முறைகள் இருந்து வந்தன. தற்போதுள்ள வேகமான காலகட்டத்திற்கு ஏற்ப வேகமான சமையல் முறைகளும் வந்துவிட்டன. அந்த வகையில் பிரஷர் குக்கர் நம் சமையல் முறையையும், நேரத்தையும் அதிகமாக மிச்சபடுத்துகிறது.

சோறு, காய்கறிகள் என அனைத்தையும் சில நிமிடங்களிலேயே வேக வைத்து தருகிறது என்பதால் பல வீடுகளிலும் பிரஷர் குக்கர் பயன்படுத்தியே சமைத்து வருகின்றனர். பிரஷர் குக்கரில் சமைத்து உணவுகள் சாப்பிடும் போது நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறி வந்தாலும், இது நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இருந்தபோதிலும் பிரஷர் குக்கரில் ஒரு சில உணவுகளை கண்டிப்பாக சமைக்க கூடாது. இது சுவையையும் குறைக்கும்.

பிரஷர் குக்கரில் சமைக்க கூடாத உணவுகள் எவை..?

* பிரஷர் குக்கர் என்பது உணவுகளை நீராவியில் சமைக்கும் ஒரு பொருளாகும். இதில் ஒரு சிலர் வறுத்த உணவுகளை சமைக்கின்றனர். அவ்வாறு சமைக்கும்போது உணவின் சுவையும் மாறும், ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும்.

* கடல் உணவுகளான மீன், இறால் போன்ற மிகவும் மென்மையானவற்றை பிரஷர் குக்கரில் சமைக்கும் போது சீக்கிரம் குலைந்து அந்த உணவு சாப்பிட முடியாதபடி கெட்டுவிடும்.

* பாஸ்தா மற்றும் நூடுல்ஸ் போன்றவற்றை பிரஷர் குக்கரில் சமைக்க கூடாது. பாஸ்தா மற்றும் நூடுல்ஸ் நீரில் வேகவைத்து சமைக்கும் உணவு என்றாலும் பிரஷர் குக்கரில் வைக்கும் போது இதன் சுவை முற்றிலுமாக மாறிவிடும்.

* பால் பொருட்கள் மற்றும் இனிப்புகளை பிரஷர் குக்கரில் சமைக்கும்போது சில நிமிடங்களிலேயே மிகவும் கெட்டியாகி அடி பிடித்துவிடும்.

* ஒரு சிலர் குழந்தைகளுக்கு பழங்களை கொடுக்க ஆரம்பிக்கும் போது மசித்து கொடுக்க வேண்டும் என்பதற்காக பிரஷர் குக்கரில் வேகவைத்து தருகின்றனர். ஆனால் இப்படி கொடுப்பது குழந்தைகளுக்கு உடல் நலத்திற்கு கேடு ஏற்படுத்துவதோடு, சுவையும் குறைந்து விடும்.

* தற்போது பலரது வீடுகளிலும் கேக், பிஸ்கட் போன்ற பொருட்களை வீட்டிலேயே செய்ய ஆரம்பித்து விட்டனர். இவ்வாறு பிரஷர் குக்கர் பயன்படுத்தி செய்யும்போது சரியான அளவில் வேகாமல் சுவை மாறிவிடும்.

* கீரை மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை பிரஷர் குக்கரில் வைக்கும் போது ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும்.

Read More : செம குட் நியூஸ்..!! இனி எங்கும் அலைய தேவையில்லை..!! வருகிறது புதிய செயலி..!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!!

English Summary

When cooking very delicate seafood such as fish and shrimp in a pressure cooker, it quickly becomes soggy that the food becomes inedible.

Chella

Next Post

2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு...! மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவு...!

Wed Mar 26 , 2025
National Democratic Alliance government in Tamil Nadu in 2026...! Union Home Minister Amit Shah registered.

You May Like