fbpx

இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் எது தெரியுமா? இங்கிருந்து வெளிநாட்டிற்கு கூட ஈஸியா போகலாம்..!

இந்திய ரயில்வே நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக உள்ளது. இது நாட்டின் உயிர்நாடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய ரயில்வே நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு ரயில்வே பல்வேறு சலுகைகளையும் வசதிகளையும் செய்து வருகிறது.

இதனால் ரயில் மூலம் நாட்டின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். பயணிகளுக்கு மிகவும் வசதியான போக்குவரத்து முறையாக ரயில் பயணம் மாறியுள்ளது. ஆனால் இந்திய ரயில்வே பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன. நம்மில் பலருக்கும் இந்த தகவல்கள் பற்றி தெரிந்திருக்காது. அந்த வகையில் இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் எது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த ரயில் நிலையத்தில் இருந்து எளிதாக வெளிநாடு கூட செல்ல முடியும். ஆம், பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் ஜோக்பானி என்று அழைக்கப்படுகிறது. இது நாட்டின் கடைசி நிலையம் ஆகும். நேபாளத்திற்கு மிக அருகில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து நடந்தே நேபாளத்திற்கு செல்ல முடியும். எனவே இந்திய மக்களுக்கு நேபாளம் செல்ல விசா, பாஸ்போர்ட் கூட தேவையில்லை. இது மட்டுமின்றி, இந்த ரயில் நிலையம் மூலம் நேபாளம் சென்றால் உங்கள் விமானச செலவையும் வெகுவாக குறைக்கலாம்.

Earn Rs.20,000 per month.. Crazy Post Office Scheme for Senior Citizens...

பீகார் மட்டுமின்றி, நாட்டின் மேற்கு எல்லையில் மற்றொரு ரயில் நிலையம் உள்ளது. அது தான். மேற்கு வங்கத்தின் சிங்காபாத் ரயில் நிலையம். இதுவும் நாட்டின் கடைசி நிலையமாகவும் கருதப்படுகிறது. மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் ஹபீப்பூர் பகுதியில் கட்டப்பட்ட சிங்காபாத் நிலையம் இந்தியாவின் கடைசி எல்லை நிலையமாகும். இது கொல்கத்தாவிற்கும் டாக்காவிற்கும் இடையே போக்குவரத்து முறையாக இருந்து வந்தது.

இந்த ரயில் நிலையத்தில் பல பயணம் மேற்கொண்டு வந்தனர். ஆனால் தற்போது  இந்த நிலையம் முற்றிலும் வெறிச்சோடி காணப்படுகிறது. பயணிகளுக்காக இங்கு எந்த ரயிலும் நிறுத்தப்படுவதில்லை. எனினும் இந்த ரயில் நிலையம் தற்போது சரக்கு ரயில் போக்குவரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. சிங்காபாத் ரயில் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து வருகிறது. இந்த ரயில் நிலையத்தின் சிக்னல்கள், தகவல் தொடர்பு மற்றும் நிலையம், தொலைபேசி மற்றும் டிக்கெட் தொடர்பான அனைத்து உபகரணங்களும் ஆங்கிலேயர் காலத்தை சேர்ந்தது தான். 

கன்னியாகுமரி ரயில் நிலையம் தான் தென்னிந்தியாவின் கடைசி ரயில் நிலையம் என்று அழைக்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது..

Read More: கருத்தடை மாத்திரைகளால் பெண்களுக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்குமா? – ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்

English Summary

Earn Rs.20,000 per month.. Crazy Post Office Scheme for Senior Citizens…

Kathir

Next Post

பீதியை கிளப்பும் எலி காய்ச்சல்..!! ஒரே மாதத்தில் 34 பேர் மரணம்..!!

Mon Nov 18 , 2024
The spread of rat fever is creating tension among the people of Kerala. 34 deaths have been reported in Kerala in the last one month. It has been revealed that most of them are infected with rat fever.

You May Like