fbpx

சூர்யகுமார் யாதவ் எந்த தமிழ் நடிகரின் தீவிர ரசிகர் தெரியுமா..? அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தனக்கு பிடித்தமான தமிழ் பட ஹீரோவை தேர்வு செய்துள்ளார். இது குறித்த தகவல்கள் அந்த நடிகரின் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சூர்ய குமார் யாதவ், இந்திய அணியிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்கா வீரர் ஏபி டிவில்லியர்ஸுக்கு பின்னர் மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் அடித்து ஆடக்கூடிய வீரர் என்ற பாராட்டை பெற்றுள்ளார். சமீபத்தில் இவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தமிழ் சினிமா குறித்து சூர்ய குமார் யாதவ் பேசியுள்ளார்.

அவர் விமானத்தில் பயணித்த போது விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை பார்த்துள்ளார். ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த சில படங்களை பார்த்து அவரது ரசிகராகவே மாறிவிட்டாராம். குறிப்பாக, கல்லூரியில் படித்த காலங்களில் தியேட்டருக்கு சென்று சூர்ய குமார் விஜய் நடித்த படங்களை பார்த்ததாக நேர்காணலில் கூறியிருக்கிறார். வாரிசு படத்தில் இடம்பெற்ற செலிப்ரேஷன் பாடலுக்கு சூர்யகுமார் யாதவ் வைப் செய்த வீடியோ காட்சிகள் சில மாதங்களுக்கு முன்பாக வைரலாகின.

இந்நிலையில், தனக்கு பிடித்தமான தமிழ் சினிமா நடிகர் விஜய் என்று சூர்ய குமார் கூறியுள்ளார். இதனால் அவரை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கும் கோட் (G.O.A.T) படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இன்னும் சில நாட்களில் இந்த படத்துடைய ஷூட்டிங் நிறைவு பெற்று விடும் என்று கூறப்படுகிறது. கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : 3 படத்தில் இந்த நடிகர் நடிக்க தடை போட்ட சிம்பு..!! சிவகார்த்திகேயன் செய்த காரியம்..!! தனுஷ் கோபத்திற்கு இதுதான் காரணம்..!!

English Summary

Indian cricket team’s action batsman Suryakumar Yadav has chosen his favorite Tamil film hero. Information about this has been widely shared by the actor’s fans.

Chella

Next Post

சென்னையில் மெஹந்தி... தாய்லாந்தில் திருமணம்! வரவேற்பு எங்கே தெரியுமா? திருமணத்திற்கு பக்கா பிளான் போட்ட நடிகை!!

Tue May 28 , 2024
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் சிம்மிளாக நடந்த நிலையில், திருமண பிளான் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சரத்குமார் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாத்துறைக்குள் நுழைந்திருந்தாலும் தனது அதிரடியான நடிப்பால் தனக்கென தனி இடம் பிடித்தவர் வரலட்சுமி. கடந்த 2012-ம் ஆண்டு ரிலீஸ் ஆன போடா போடி படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் […]

You May Like