fbpx

மாநாட்டில் விஜய் முன்னிலையில் இணையும் அரசியல் பிரபலங்கள் யார் யார் தெரியுமா..? பரபரப்பு தகவல்..!!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டில் கலந்து கொள்ளும் சில பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியலில் விஜய்யின் தமிழகம் வெற்றிக் கழகம் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அவர் தமிழன்னை உள்பட முன்னோர்களுக்கு வைக்கப்பட்டுள்ள கட்டவுட்டுக்கள் நடுநிலை வாக்காளர்களின் மத்தியில் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. இந்நிலையில் தான், விஜய் அரசியல் கட்சியில் சில பிரபலங்கள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய மாநாட்டில் அந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விஜய் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசியல் நபர்களான செஞ்சி ராமச்சந்திரன், நாஞ்சில் சம்பத், வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரும் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி, திமுக மற்றும் அதிமுகவில் இருக்கும் சில அதிருப்தி தலைவர்களும் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணையவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அவர்கள் யாரென்று ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read More : வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமி..!! நோட்டமிட்ட மர்ம நபர்..!! திடீரென உள்ளே புகுந்து பாலியல் பலாத்காரம்..!!

English Summary

As the first state conference of actor Vijay’s Tamil Nadu Vetri Kazhagam is being held today, information has been released about some of the celebrities who will be attending the conference.

Chella

Next Post

பிக்பாஸ் எலிமினேஷன்... இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு குட் பாய் சொன்ன பெண் போட்டியாளர் இவர்தான்..!!

Sun Oct 27 , 2024
There are reports that a female contestant has walked out of Bigg Boss Season 8 hosted by Vijay Sethupathi this week.

You May Like