fbpx

ரூ.1,000 யார் கொடுக்குறாங்கன்னு தெரியுமா..? இரட்டை இலை தான்..!! மூதாட்டியிடம் பல்பு வாங்கிய அமைச்சர் பொன்முடி..?

மகளிர் உரிமைத் தொகையை யார் கொடுக்கிறார்கள் தெரியுமா என மூதாட்டி ஒருவரிடம் அமைச்சர் பொன்முடி கேட்டார். அதற்கு சுற்றியிருந்தவர்கள் எல்லாம் முதலமைச்சர் முக.ஸ்டாலின் என எடுத்துக்கொடுக்க, மூதாட்டியோ, ‘இல்ல, இல்ல நான் எப்பவும் இரட்டை இலைதான்’ என பதிலளித்தார். இதனைக் கேட்ட பொன்முடி புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்பட்டார்.

தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு ‘மகளிர் உரிமைத் திட்டம்’ என்ற பெயரில் மாதம் ரூ.1000 கொடுக்கப்படும் என முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இத்திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் பணியை முதல்வர் ஸ்டாலின் தருமபுரியில் சமீபத்தில் துவக்கி வைத்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடி, மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் வழங்கும் முகாமை பார்வையிட சென்றார். அப்போது விண்ணப்பம் வாங்க வந்த மூதாட்டி ஒருவரிடம், பொன்முடி, ‘எந்த ஊருமா நீ’ எனக் கேட்டார்.

அதற்கு அந்த மூதாட்டி, ‘முத்தியால் பேட்டை’ என்று சொல்கிறார். ‘இங்கதான் வரணுமா?’ என்று அருகில் இருப்பவரிடம் பொன்முடி விசாரிக்க அவரும் ஆம் என்பதுபோல் தலையாட்டினார்.

பொன்முடி: என்ன வேலை செய்ற? நீங்க எதுக்கு வந்திருக்கீங்க?

(மூதாட்டி தலையை மட்டும் அசைக்க, அருகில் இருப்பவர்கள் ரூ.1000 கொடுக்கிறார்களே அதுக்கு தான்’ என பதிலளித்தனர்)

மூதாட்டி: தெரியும் அது தெரியும்.

பொன்முடி: தெரியும்னா அத சொல்லுமா.. அததான கேட்குறேன். யார் கொடுக்கறாங்க தெரியுமா?

மூதாட்டி பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, விண்ணப்பத்தை நிரப்பும் பெண்ணோ, ‘முதல்வர் ஸ்டாலின்னு சொல்லுங்க’ எனக் கூறினார். அதை கேட்டு அந்த மூதாட்டி, ‘இல்ல இல்ல.. நான் எப்பவுமே இரட்டை இலைதான்’ என்று சொல்ல அதைக்கேட்டு பொன்முடி புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்பட்டார். ஆனாலும், அந்த மூதாட்டி இன்னும் பேச்சை தொடர, இடைமறித்த பொன்முடி, ‘போதும் போதும்’ எனக் கூறி பேச்சை நிறுத்தினார். திமுக-வின் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க வந்து, அமைச்சர் முன்னால் இரட்டை இலைதான் என மூதாட்டி பேசியது அங்கு திடீரென பரபரப்பை ஏற்படுத்தியது.

Chella

Next Post

முதியவருடன் நிர்வாண புகைப்படம் எடுத்த சீரியல் நடிகை..!! ஆசையுடன் கட்டியணைத்தபோது கதவை திறந்த கௌசிக்..!! நடந்தது என்ன..?

Fri Jul 28 , 2023
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பட்டம் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான 75 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர், கொல்லம் பரவூரிலுள்ள தனது வீட்டை வாடகைக்குவிட விளம்பரம் கொடுத்திருந்தார். அவரது எண்ணுக்கு கடந்த மே மாதம் 24ஆம் தேதி அழைத்த ஒரு பெண், வீடு வாடகைக்கு வேண்டும் எனக் கேட்டுள்ளார். பின்னர் முதியவரிடம் போனில் அடிக்கடி பேசிய அந்தப் பெண், அவருடன் நட்பு ஏற்படுத்தியிருக்கிறார். பின்னர் ஆசைவார்த்தை கூறி முதியவரை […]

You May Like