நடிகர் அஜித், விடா முயற்சி படத்தில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடித்து வருகிறார். லைக்காவின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பல இழுபறிக்கு பிறகு அஜர்பைஜானில் துவங்கியது. ஆனால், அங்கு கடுமையான பனிப்பொழிவு காரணமாக படக்குழு சென்னைக்கு திரும்பியது. பிறகு, அஜித்திற்கு அறுவை சிகிச்சை நடைபெற்று சில காலம் ஓய்வில் இருந்தார். பின்பு பைக் ரைட் கிளம்பிய அஜித், திரும்பி வந்து தன் அடுத்த படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தன. அந்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கில் பிரபல நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். தீவிரமான அஜித் ரசிகரான ஆதிக் குட் பேட் அக்லி படத்தின் மூலம் அவரையே இயக்க இருப்பது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் அஜித் 3 வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், அஜித்தின் திரைப்பயணத்திலேயே மிகவும் வித்யாசமான படமாக இது இருக்கும் என்றும் கூறுகின்றன. இப்படம் காமெடி திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. மறுபக்கம் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களை பற்றியும் அவ்வப்போது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தபு நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தன.
தற்போது இப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் பாபி டியோல் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. பாலிவுட்டில் பிரபலமான நடிகராக வலம் வரும் பாபி டியோல் சமீபத்தில் வில்லனாக நடித்த அனிமல் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தது. தொடர்ந்து தற்போது சூர்யாவின் கங்குவா படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பாபி டியோல். இதையடுத்து அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக பாபி டியோல் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இத்தகவல் உண்மையா? இல்லை வதந்தியா? என்பது தெரியவில்லை.
Read More : ரூ.84,000 கோடி சொத்து..!! ஆடம்பர பங்களா..!! யார் இந்த பணக்கார பெண்..? வியப்பூட்டும் தகவல்கள்..!!