fbpx

2023 ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற உலக அழகி யார் தெரியுமா.?

2023 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் உலக அழகி போட்டி தென் அமெரிக்கா நாடான சான் சால்வடார் நாட்டில் உள்ள ஜோஸ் பினேடா அரங்கில் வைத்து நடைபெற்றது. இது 72 ஆவது மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியாகும்.

இந்த உலக அழகி போட்டியில் இந்தப் பிரபஞ்சம் எங்கும் உள்ள 90 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 23 வயதானஸ்வேதா ஷ்ரத்தா என்ற அழகியும் கலந்து கொண்டார். இவர் பஞ்சாப் மாநிலம் சண்டிகர் நகரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற 20 பிரபஞ்ச அழகிகளின் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்று இருந்தது.

ஆனால் இறுதிப் போட்டியில் இவரால் வெற்றி பெற முடியவில்லை. 2023 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகிக்கான இறுதிப் போட்டியில் நிக்கிற குவா நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியும் டிவி தொகுப்பாளர் ஷெய்னிஸ் பலாசியோஸ் என்பவர் முதலிடத்தை பெற்று 2023 ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டி சென்றார். இவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் தாய்லாந்து நாட்டு அழகியான ஆண்டனியோ ப்ரொசில்ட்டும், மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலியா நாட்டு அழகியான மராயோ வில்சனும் பெற்றுள்ளனர்.

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற
ஷெய்னிஸ் பலாசியோஸ் நிக்கிற குவா நாட்டைச் சேர்ந்த இவர் முதல் முதலாக பட்டம் பெற்று சாதனை படைத்திருக்கிறார். இவருக்கு 2022 ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் ஆர்யோனி கேப்ரியல் உலக அழகி பட்டத்திற்கான மகுடத்தை அறிவித்தார். இந்த வருடம் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றவர் ஒரு கைப்பந்தாட்ட வீராங்கனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Post

பள்ளிகளுக்கு விடுமுறை!... வெளுத்துவாங்கும் கனமழை!... ஆட்சியர்கள் அறிவிப்பு!

Thu Nov 23 , 2023
கனமழை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26 ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு – […]

You May Like