fbpx

Summer Tips : கோடையில் மண்பானை தண்ணீர் ஏன் குடிக்கனும் தெரியுமா..?

கிராமங்களில் இன்றும் மண்பானையில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இந்த கோடை காலத்தில் ஏன் ஒருவர் மண்பானையில் உள்ள தண்ணீரை பருக வேண்டும் என்பதற்கான காரணங்கள் சில இதோ..

வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் பலர் தங்கள் வீடுகளில் மண்பானை வாங்கி அதில் தண்ணீர் குடிப்பது வழக்கம். ஆனால், இந்த பானையில் தண்ணீர் குடிப்பது வெப்பம் மற்றும் வெயிலில் இருந்து உடலை பாதுகாப்பாகவும், குளிர்ச்சியாகவும் வைப்பதோடு மட்டுமின்றி, உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா..?ஒருவேளை உங்களுக்குத் தெரியாவிட்டால், மண்பானை தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

மெடபாலிஸத்தை அதிகப்படுத்துகிறது:

களிமண் பானையில் பிடித்து வைத்திருக்கும் தண்ணீரில் எந்தவிதமான ரசாயனங்களும் இருப்பதில்லை. அதனால் மண்பானை தண்ணீர் நமது மெடபாலிஸத்தை அதிகப்படுத்த உதவுகிறது. மேலும் மண்பானை தண்ணீரில் பல முக்கியமான தாதுக்கள் இருப்பதால் செரிமானத்திற்கு உதவி செய்கிறது.

வெப்பதாக்கத்தை தடுக்கிறது: 

கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் வெப்ப தாக்கம் பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சனையாகும். மண்பானை தண்ணீரை பருகுவதன் மூலம் எவ்வுளவு வெப்பநிலை அதிகரித்தாலும் உடல் குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது. மேலும் இதிலுள்ள ஊட்டச்சத்துகள் உடலுக்கு விரைவில் நீர்ச்சத்து கிடைக்க வழிவகை செய்கிறது.

இயற்கை நிவாரணி: 

பானை செய்ய பயன்படும் களிமண்ணில் பலவித தாதுக்களும் மின் காந்த ஆற்றல்களும் உள்ளது. இது கோடை காலத்தில் அதிகப்படியான வெப்பம் காரணமாக உடலிலிருந்து வெளியேறும் ஆற்றலை உடனடியாக பதிலீடு செய்ய உதவுகிறது.

தொண்டைக்கு இதமளிக்கிறது:

ஃபிரிட்ஜில் உள்ள குளிர்ந்த நீரை குடித்தால் தொண்டையில் அரிப்பும் புண்ணும் உண்டாகும். ஆனால் மண்பானையில் உள்ள தண்ணீர் சரியான வெப்பநிலையில் இருப்பதால் தொண்டைக்கு இதமளிப்பத்போடு சளி, இருமல் போன்ற தொந்தரவுகளை வரவழைப்பதில்லை.

இயற்கை வடிகட்டி: 

களிமண் இயற்கையாக வடிகட்டும் பணியைச் செய்கிறது. இது தண்ணீரில் உள்ள அழுக்குகள் மற்றும் தீங்கு நிறைந்த நச்சுகளை உரிஞ்சிக்கொள்கிறது. மண்பானையில் தண்ணிர் சேமித்து வைக்கும் போது, களிமண்ணில் உள்ள சிறிய துளைகள் வழியாக சென்று இயற்கையான முறையில் சுத்திகரிப்பு செய்யப்படுகின்றன.

Read more ; “அரசு ஊழியர் லஞ்சம் வாங்கினால் மனைவிக்கும் தண்டணை” – உயர் நீதிமன்றம் அதிரடி!

English Summary

English summary

Next Post

உங்களுக்கு ஒரு சேலஞ்ச்! இந்த படத்தில் இருக்குற 3 வித்தியாசங்கள 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Sun Jun 2 , 2024
English summary

You May Like