பிறப்பும் , இறப்பும் அவரவர் கையில் இல்லை என்றாலும், நாம் வாழும் வாழ்க்கை முறை நம்முடைய கையிலே உள்ளது. உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள புத்தகம் படித்தல், உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமாக உணவுகளை சாப்பிடுவது என்பது நாம் அனைவரும் அறிந்த பொதுவான விஷயங்களாகும். இந்த பட்டியலை தவிர்த்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள அடிக்கடி உடலுறவு கொள்வது என்பது சிறந்த வழிமுறையாக ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே பருவகாலத்திற்கும் உடலுறவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. குறிப்பாகக் குளிர்காலம் என்பது ஒருவரின் அந்தரங்க வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அடிக்கடி உடலுறவு வைத்து கொள்ளும் போது மனஅழுத்தம் குறைகிறது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. அதுமட்டுமின்றி, முதுமையில் நோய் வருவதை தடுக்கிறது, நீண்ட ஆயுளைக் தருகிறது. மேலும், இதயத்தை வலுப்படுத்தும். பாலியல் செயல்பாடுகளின் குறைந்த ஈடுபாடு கொண்ட ஆண்களுக்கு, இருதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் பரிந்துரைத்தது. இவை மட்டுமின்றி, அதிகாலையில் உடலுறவு வைத்துக் கொள்ளும் தம்பதியினருக்கு, அந்த நாள் குதூகலமாக இருக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது உடனே மன அழுத்தத்தை போக்கி நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவுகிறதாம்.
குளிர் காலம் : குளிர் காலம் என்பது உடல் மற்றும் மனம் என இரண்டையும் பாதிக்கிறது.. அது பாலியல் ஆசையையும் பாதிக்கிறது. குளிர்காலத்தில் பொதுவாகக் குறுகிய பகலையும் நீண்ட இரவுகளையும் கொண்டு இருக்கும். இது உடலில் மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கிறது. இதனால் உடலில் சோம்பல் ஏற்படும். கூடவே பாலியல் உறவிலும் ஆர்வம் இருக்காது. இது மட்டுமின்றி பொதுவாகக் குளிர் காலத்தில் மக்கள் அதிகம் வீடுகளிலேயே முடங்கி இருப்பார்கள். இதனால் உடல் செயல்பாடுகள் இருக்காது என்பதால் அதுவும் அந்தரங்க வாழ்க்கையைப் பாதிக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது.
மேலும், குளிர் காலத்தில் ரத்த ஓட்டத்தை முக்கிய உறுப்புகளுக்கு இதயம் திருப்பி விடுகிறது. இதனால் பாலியல் உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. மேலும், குளிர் காலத்தில் பொதுவாகவே நமது மனசு ஏதோ ஒரு மாதிரி இருக்கும். மன அழுத்தம் இருப்பது போலவும், உடலில் எனர்ஜி இல்லாதது போலவும் இருக்கும். இதை ஆங்கிலத்தில் Seasonal Affective Disorder என்கிறார்கள். இதுவும் நமது பாலியல் வேட்கையைக் கடுமையாகப் பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
என்ன செய்ய வேண்டும் : இந்த சிக்கலைச் சமாளிக்கவும் சில வழிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். குளிர் காலத்தில் முடிந்தவரைச் சூரிய ஒளி உடலில் படுவது போலக் கொஞ்ச நேரம் இருங்கள். மேலும், வழக்கமான உடற்பயிற்சி செய்யுங்கள். வைட்டமின் டி அதிகம் இருக்கும் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதேநேரம் வைட்டமின் டி மாத்திரைகளை எல்லாம் தேவையில்லாமல் எடுத்துக்கொள்ளாதீர்கள்.
மேலும், தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள். குளிர் காலத்திலும் முடிந்தவரை ஆக்டிவாக இருங்கள். இது மனநிலையை மேம்படுத்தும்.. மேலும், பாலியல் வேட்கை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், முடிந்தவரை உங்கள் பார்ட்னர் உடன் நெருக்கமாக இருங்கள் என்றும் இதன் மூலம் குளிரைத் தாண்டி தம்பதிகளின் நெருக்கம் அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
Read more ; ஐஐடி மெட்ராஸ் & இஸ்ரோ இணைந்து நடத்தும் வெப்ப அறிவியல் ஆராய்ச்சி…!