fbpx

மீதமாகும் உணவை சேமித்து வைத்து சாப்பிடுகிறீர்களா?… புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்!

மீதமாகும் உணவை பிளாஸ்டிக் டப்பாவில் சேமித்து வைப்பதால் உடல் நலத்திற்கு என்னென்ன பாதிப்பு வரும் என்பதை இங்கு காணலாம்.

பிளாஸ்டிக் நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது. கையில் எடுக்கும் பை முதல் சாப்பிடும் தட்டு வரை எல்லாமே பிளாஸ்டிக் மயம்தான். உணவு சேமிப்புக் கொள்கலன்கள் உட்பட பல்வேறு வகையில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பிளாஸ்டிக்கில் செய்த பாத்திரங்கள் பயன்படுத்துவதால் உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஏனெனில் பிளாஸ்டிக் பொருட்களில் உள்ள டைதைல் ஹெக்ஸைல் பித்தலேட் போன்ற வேதிபொருள்கள் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. மேலும் ஹார்மோன் சமநிலையை மாற்றும். மீதமான உணவை பிளாஸ்டிக் டப்பாவில் சேமித்து வைப்பதை தவிர்க்க நிபுணர்கள் கடுமையாக அறிவுறுத்துகின்றனர்.

பிளாஸ்டிக் டப்பாவில் மீந்து போன உணவை வைத்து பிரிட்ஜில் சேமிப்பது நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் டப்பாவை பயன்படுத்துவதால் பல தீமைகள் ஏற்படுகின்றன. ஏனென்றால் பிளாஸ்டிக் டப்பாக்களில் சூடான உணவுகளை வைக்கும்போது, ​அவை நம்முடைய ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) போன்ற குறிப்பிட்ட வகையான பிளாஸ்டிக் பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த கொள்கலன்கள் பொதுவான பிளாஸ்டிக் பாத்திரங்களிலிருந்து சற்று வேறுபடுகின்றன. இவை கூடுமான வரைக்கும் நமது ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்காத பாதுகாப்பான விருப்பங்களாக கருதப்படுகின்றன.

பிளாஸ்டிக் பாத்திரங்களை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அடிக்கடி பிளாஸ்டிக் டப்பாவில் உணவை பரிமாறும்போது ரசாயனங்கள் நமது உணவில் கலந்து, அதன் தரத்தை மாற்றி, நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். பிளாஸ்டிக் பாத்திரங்களை தவறாமல் அடிக்கடி மாற்ற வேண்டும். இப்படி செய்வதால் நீண்ட கால பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கமுடியும். பிளாஸ்டிக் கொள்கலன்களில் உணவைச் சேமிப்பது, மீண்டும் சூடுபடுத்துவது அல்லது சமைப்பது தீமை தான். PET போன்ற பாதுகாப்பான பிளாஸ்டிக் பொருட்களை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பயன்படுத்தினால் உடல்நலக் குறைவை தவிர்க்கலாம். ரசாயனங்கள் உடலில் செல்வதை தடுக்க பிளாஸ்டிக் பாத்திரங்களை தவறாமல் மாற்றுவதும் நல்லது. முடிந்தவரை பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தவிருங்கள்.

Kokila

Next Post

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேச கூடாது...! அண்ணாமலையை எகிறி அடித்த ஓபிஎஸ்...!

Tue Jun 13 , 2023
வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை இனி வருங்காலங்களில் அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; அகில உலகத் தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா பற்றியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பற்றியும் தரக்குறைவாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது […]

You May Like