fbpx

TANGEDCO: தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மின்துறையில் வேலைவாய்ப்பு…! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,050 முதல் அதிகபட்சம் ரூ.8,500 வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் வயது இருக்க வேண்டியது அவசியம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த Electrician பணிகளுக்கு மொத்தம் 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு மதுரையில் பணி வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: Apprenticeship Training Portal | Govt. of India (apprenticeshipindia.gov.in)

Also Read: ரேஷன் அட்டையில் திருத்தம்…! இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே…! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

Vignesh

Next Post

ஒரே நாளில் 18,840 பேருக்கு புதிய கொரோனா வைரஸ்...! 43 பேர் பலி... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை...?

Sat Jul 9 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 18,840 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 43 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 16,104 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

You May Like