fbpx

இது எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே.. தினமும் தங்கத்தை தூசியாக உமிழுமாம்! எங்கனு தெரியுமா?

உலகில் மதிப்பு மிக்க உலோகங்களில் ஒன்றாக திகழும் தங்கத்தை விரும்பாதோர் யாருமே இருக்க முடியாது. மதிப்பு மிக்க தங்கத்தை நாள்தோறும் ஓர் எரிமலை கக்குகிறது என சொன்னால் நம்ப முடியுமா? இன்றளவும் செயற்பாட்டில் இருக்கும் எரிமலையொன்று தங்கத்தை உமிழ்வதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அண்டார்டிகாவின் பனிக்கட்டி சூழ்ந்த பகுதியில், மவுண்ட் எரெபஸ் என்ற தங்கம் உமிழும் ராட்சத எரிமலையானது உள்ளது. இதன் ஸ்பெஷல் என்னவெனில் தோராயமாக தினமும் 80 கிராம் படிகப்படுத்தப்பட்ட தங்கத்தை வெளியிடுகிறது. அதாவது, தினமும் கிட்டத்தட்ட 6,000 டொலர்கள், இலங்கை பணமதிப்பில் சுமார் 18 லட்சம் ரூபா மதிப்புள்ள தங்கம் இந்தத் எரிமலையிலிருந்து வெளியேறுகிறது.

அதன்படி, 1972 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை சுமார் 1,518 கிலோ தங்கத் துகள்கள் இந்த எரிமலையில் இருந்து தூசி வடிவில் வளிமண்டலத்தை அடைந்துள்ளன. இதனால், எரிமலைக்கு அடியில் தங்கச் சுரங்கம் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த எரிமலையானது தொடர்ந்து வாயு மற்றும் நீராவியை வெளியிடுகிறது என்றும், எப்போதாவது இடம்பெறும் ஸ்ட்ரோம்போலியன் வெடிப்புகளில் பாறைகளை வெளியேற்றுகிறது என்றும் கூறப்படுகிறது.  எரேபஸ் மலையானது ஒரு மெல்லிய மேலோட்டத்தின் மேல் அமர்ந்திருப்பதாக நாசாவும் விவரிக்கிறது, இதனால் உருகிய பாறைகள் பூமியின் உட்புறத்தில் இருந்து எளிதாக உயரும் என்றும் கூறுகின்றனர்.

Next Post

தமிழகத்தில் 7மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு..! அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67%..! குறைந்தபட்சம் மத்திய சென்னையில் 67.35%..!

Fri Apr 19 , 2024
தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09%வாக்குப்பதிவு. 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றினர். இரவு 7 மணியளவில் பல வாக்குச்சக்காவடியில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. சில வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. […]

You May Like