fbpx

முடிக்கு டை அடிக்கிறீர்களா?… என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் தெரியுமா?… இந்த பதிவை கண்டிப்பா படியுங்கள்!

வெள்ளை முடியை மறைக்க ஹேர் டையை பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

முன்பெல்லாம் வயதானவர்களுக்குத் தான் வெள்ளை முடி வரும் ஆனால் இப்போது சிறிய வயதுடைய பிள்ளைகளுக்கு கூட இந்த இளநரை பிரச்சினை அதிகம் இருக்கின்றது. இந்த இளநரை பிரச்சினை விட்டமின் B6,B12,பயோடின் மற்றும் விட்டமின் D போன்ற ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாகத்தான் வெள்ளைமுடி உருவாகிறது.

இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் உணவுப்பழக்கம், மனஅழுத்தம் மற்றும் பரம்பரை என்று இருக்கலாம். இந்த இளநரையை மறைக்க பலர் சாயம் பூசுவதைத்தான் தீர்வாக எண்ணிவிடுகிறார்கள். ஆனால் அப்படி சாயம் பூசுவதிலும் உங்கள் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுதான்.நாம் பயன்படுத்து ஹேர் டையில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கெமிக்கல்கள் கலந்திருப்பர்.

இந்த கெமிக்கல் கலந்த ஹேர் டையை பயன்படுத்துவதால் ஒவ்வாமை பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. உச்சந்தலையில் எரியும் உணர்வு மற்றும் சொறி பிரச்சனை ஏற்பட தொடங்குகிறது. ரசாயனம் நிறைந்த நிறத்தை கூந்தலுக்கு தடவுவது முடியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதைத் தடவுவதன் மூலம் முடி உடையும். இதனுடன் முடி கொட்டும் பிரச்சனையும் தொடங்குகிறது. கெமிக்கல் கலர் பூசுவதால் கண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

பல சமயங்களில் கண்பார்வை போய்விடும் அபாயம் கூட ஏற்படும். ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். எனவே ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இதை பயன்படுத்தினால் ஆஸ்துமாவின் அறிகுறிகளை அதிகரிக்கச் செய்யும். எனவே இப்பிரச்சனை உள்ளவர்கள், ஹேர் டை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. கூந்தலுக்கு கலர் பூசுவதால் கூந்தல் மெலிந்து பலவீனமாவதோடு, மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும் எனவே ஹேர் டை பயன்படுத்துபவர்கள் அதனை தவிர்ப்பது நல்லது.

Kokila

Next Post

#Result: காலை 8 மணிக்கு தொடங்கும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை...! முன்னிலை வகிக்கப் போவது யார்...?

Sat May 13 , 2023
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 58,545 வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. காலை 10 மணி முதல் முன்னிலை விவரம் வெளியாகி 12 மணிக்குள் பெரும்பாலான முடிவுகள் […]

You May Like