ரேஷன் அட்டைதாரர்கள் கேஒய்சி பதிவு பதிவு செய்யாவிட்டால், மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு இலவச அரிசி ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். இதனால், ஏராளமான மக்கள் பயனடைந்துள்ளனர். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள (ஏ.ஏ.ஒய்) ரேஷன் அட்டைக்கு தலா 35 கிலோவும், பி.எச்.எச் கார்டிற்கு 5 கிலோவும், அதிகபட்சம் கார்டுக்கு 20 கிலோ வரை இலவச அரிசி வழங்கப்படுகிறது. இலவச அரிசி பெறும், இந்த 2 பிரிவு அட்டைதாரர்களும் குடும்ப தலைவர், உறுப்பினர்களின் ஆதார் எண், கைரேகை, கண் புருவம் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டுமென மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதாவது, அந்தியோதயா கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணிகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்யாவிட்டால், அவர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுவது ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விரல் ரேகை இன்னமும் பதியாதவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. மரணம், வெளிநாட்டுக்கு நிரந்தரமாக சென்றது உள்ளிட்ட காரணங்களால், கார்டுகளில் சிலரது பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளதாம். ஆனால், அவர்களுக்கான பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. 3.65 கோடி உறுப்பினர்களில், இதுவரை 2.80 கோடி பேர் பதிவு செய்துள்ளன. 76 லட்சம் பேர் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால், மார்ச் மாதத்திற்கு பிறகு பதிவு செய்யாதவர்களுக்கு, ரேஷன் கடைகளில் இலவச அரிசி தொடர்ந்து கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Read More : இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? தூக்கத்தில் கூட உடல் எடையை குறைக்கலாம்..!! சூப்பர் டிப்ஸ் இதோ..!!