fbpx

’உனக்கு என் பொண்ணு கேட்குதா’..? நடுரோட்டில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!! தந்தை, அண்ணன் வெறிச்செயல்..!!

மகளின் காதலனை நடுரோட்டில் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக தந்தை மற்றும் அண்ணன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (28). இவர் சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார். இவர் தனது உறவினரான மணி என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அப்படி இருந்த போதிலும் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இதனால், பெண்ணின் தந்தை மற்றும் அவரது சகோதரர் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து வெளியே வந்த கார்த்திக்கை, காதலியின் தந்தை மணி மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோர் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் காதலனை நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டேவுக்கு திடீர் நெஞ்சுவலி..!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Chella

Next Post

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.8,500..!! ராகுல் காந்தி மாஸ் அறிவிப்பு..!!

Fri Apr 12 , 2024
ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மக்களவை தொகுதியில் அனுப்கரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “இந்த மக்களவைத் தேர்தல் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கானது. பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர், பொதுப் பிரிவில் உள்ள ஏழைகளின் தேர்தல். இன்று நாட்டின் மிகப்பெரிய பிரச்சனை வேலையின்மை, பணவீக்கம் தான். மோடியின் முகம் 24 மணி நேரமும் ஊடகங்களில் தெரியும். சில சமயங்களில் அவர் […]

You May Like