fbpx

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா…? வரும் 8-ம் தேதி சிறப்பு முகாம்…!

பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் 08.06.2024 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் வட்டத்தில் வளத்தோட்டம், உத்திரமேரூர் வட்டத்தில் பெருங்கோழி, வாலாஜாபாத் வட்டத்தில் நாயக்கன்குப்பம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் சந்தவேலூர், குன்றத்தூர் வட்டத்தில் மணிசேத்துப்பட்டு ஆகிய கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன.

மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை/நகல் குடும்ப அட்டை, கைபேசி பதிவு/மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும் மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

English Summary

Do you want to amend the ration card…? Special camp on coming 8th

Vignesh

Next Post

ஷாக்...! வரும் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்வு...!

Fri Jun 7 , 2024
Electricity tariff increase from next July

You May Like