fbpx

செருப்பால் அடிக்கணுமா..? என்னை அழைத்தால் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு வருவேன்..!! நடிகை ராதிகா பரபரப்பு கருத்து..!!

தமிழ் திரைப்பட நடிகர் சங்க செயலாளர் விஷால் செய்தியாளர்களிடம் போதும்போது, “தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ”பெண்கள் பாதுகாப்பு பற்றியெல்லாம் நீ பேசலாமா? ஒரு பெண்ணை பற்றி பேசும் போது உன்னுடைய நாக்கு ரொம்பவே கேர்ஃபுல்லாக இருக்க வேண்டும். உலகிற்கே தெரியும் நீ எவ்ளோ பெரிய ஃபிராடு என்று. ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசும் போது உன் உடல் ஏன் நடுங்குது..? நீயெல்லாம் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப் போறியா..?

அதெல்லாம் சரி, உன்னுடன் இருந்த பெண்கள் எல்லாம் உன்னை விட்டு ஏன் சென்றனர்..? உன்னுடைய நிச்சயதார்த்தம் ஏன் நின்றுப் போனது..? இந்த கேள்விக்கெல்லாம் அடுத்த முறை பதில் சொல். நீ எந்த பதவியில் இருந்தாலும் எனக்கு கவலையில்லை. கர்மா ஏற்கனவே உனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து வருகிறது. என் வீட்டில் நிறைய வித விதமான செருப்புகள் உள்ளன” என நடிகரின் பெயரை குறிப்பிடாமல் நடிகை ஸ்ரீரெட்டி ட்வீட் போட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுகுறித்து நடிகை ராதிகா கூறுகையில், ”தமிழ் சினிமாவில் பிரபல பாடகி ஒருவர் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்து கூறியபோது, இத்தனை நாட்கள் கழித்து ஏன் சொல்கிறீர்கள்? என்ன சாட்சி இருக்கிறது? என்று கேட்டார்கள். ஒரு பெண்ணின் மனதில் ஓடக்கூடிய விஷயங்களை ஆண்களால் புரிந்துகொள்ள முடியாது. அந்த பாடகி, தனது வாய்ப்புகளை இழந்து கஷ்டப்பட்டு வருகிறார்.

திரைத்துறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோரை செருப்பால் அடிக்க வேண்டும் என்று விஷால் கூறியிருப்பது முறையான பதில் அல்ல. நடிகைகள் குறித்து யூடியூபர் ஒருவர், தரக்குறைவாக பேசி வருகிறார். விஷாலுக்கு தைரியம் இருந்தால் அவரை செருப்பால் அடிக்கட்டும். என்னை அழைத்தால் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : செருப்பால் அடிக்கணுமா..? என்னை அழைத்தால் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு வருவேன்..!! நடிகை ராதிகா பரபரப்பு கருத்து..!!

English Summary

Vishal’s statement that rape offenders in the film industry should be hit with sandal is not a valid response.

Chella

Next Post

ஆசியாவின் 'கோடீஸ்வர தலைநகரமாக' உருவெடுத்த மும்பை..!! இந்தியாவில் இத்தனை பணக்காரர்களா..?

Sat Aug 31 , 2024
Mumbai, the financial hub of India, has emerged as the 'Billionaire Capital'.

You May Like