fbpx

ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ வேண்டுமா..? மாதம் ரூ.5,000 கிடைக்கும்..!! உடனே இணைந்திருங்கள்..!!

இளம் வயதில் ஓடி ஓடி வேலை செய்தாலும், உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்வதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். அதற்கு நீங்கள் இப்போதிலிருந்தே தயாராக வேண்டும். நம் குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல், உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை இப்போதே சேமிக்க தொடங்குங்கள். அந்தவகையில், மாதம் ரூ.5,000 கிடைக்கும் வகையிலான பென்ஷன் திட்டம் குறித்துதான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

அடல் பென்சன் யோஜனா :

இந்த திட்டத்தை கடந்த 2015ஆம் ஆண்டு மோடி அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் தனியார் மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன் பெறலாம். இதில் இணையும் தொழிலாளர்கள் தங்களது ஓய்வுக்காலத்தில் மாதம் ரூ.5,000 பெறலாம். குறைந்தபட்ச ஓய்வுத்தொகையை பெற்றுக் கொள்வதற்கான உத்திரவாதமும் இதில் உள்ளது.

அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் பயன்கள் :

இந்த திட்டமானது உங்கள் வாழ்நாள் முழுவதும் பென்ஷனை கொடுக்கிறது. பென்ஷன் வாங்கும் நபர் இறந்து விட்டால், அவருடைய கணவர் அல்லது மனைவிக்கு அந்த பணம் சென்றடையும். இருவருமே இறந்து விட்டால், நாமினிக்கு பணம் கிடைக்கும். மேலும், வருமான வரி சட்டம் பிரிவு 80சிசிடி பிரிவின் கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கிறது. இதில் மாதம் ரூ.210 முதலீடு செய்தால் உங்களுடைய ஓய்வு காலத்தில் மாதம் 5,000 ரூபாய் பெறலாம்.

திட்டத்தில் எப்படி இணைவது..?

18 – 40 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். அனைத்து தேசிய வங்கிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் வங்கிக் கணக்கு எந்த வங்கியில் உள்ளது என்பதை பார்வையிட்டு இந்த திட்டத்திற்கு பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து, அதனை நிரப்பி வங்கியில் சமர்ப்பிக்கலாம்.

அல்லது வங்கிக்கே நேரடியாக சென்று விண்ணப்பம் வாங்கி, அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இதற்கு ஆதார் எண் மற்றும் செல்போன் எண் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர்வதற்கு அங்கீகரிக்கப்பட்டால் உங்கள் செல்போன் எண்ணிற்கு உறுதிபடுத்தப்பட்ட எஸ்எம்எஸ் வரும். எனவே, இத்திட்டத்தில் உடனே இணைந்து பயன்பெறுங்கள்.

Chella

Next Post

பெண்ணை காதலித்த இளைஞரின் கதையை கூலிப்படையை வைத்து முடித்த தந்தை….! காதலன் கொலை செய்யப்பட்டது தெரிந்தும் அமைதியாக இருந்த காதலி காரணம் என்ன….?

Wed Aug 16 , 2023
தஞ்சை அருகே மகளை காதலித்த இளைஞரை கூலிப்படையை வைத்து கொலை செய்த தந்தை உட்பட, 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தஞ்சை அருகே உள்ள திருமலை சமுத்திரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (23) இவர் ஒரு தனியார் பால் கம்பெனி ஒன்றில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பாலகுரு என்பவருடன் இருந்த பழக்கத்தின் காரணமாக, நில விற்பனை தொடர்பாக சக்திவேல் அடிக்கடி […]

You May Like