சிறுநீரகங்கள் சரிவர இயங்க ஒருவர் தனது எடையில் 1 கிலோவுக்கு 40 மி.லி. வரை தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது அவசியமாகியுள்ளது.
கோடையில் மக்கள் அதிகளவு தண்ணீர் குடிப்பார்கள். ஆனால், அதிக குளிர்ந்த நீரை திடீரென குடித்தால், அது மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏனென்றால், அத்தகைய சூழ்நிலையில் வெப்ப பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. மேலும், இந்த காலகட்டத்தில் கார்பனேற்றப்பட்ட பானங்களை குடிப்பது நல்லதல்ல. ஏனெனில் அத்தகைய பானங்கள் அதிக சர்க்கரை உள்ளடக்கத்துடன் வருகின்றன. அந்தவகையில், ஒருவர் தனது எடையில் 1 கிலோவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
சிறுநீரகங்கள் சரிவர இயங்க ஒருவது தனது எடையில் 1 கிலோவுக்கு 40 மி.லி. வரை தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது அவசியமாகியுள்ளது. அதுவே கோடை காலத்தில் அந்த அளவு 60 மி.லி. ஆக தேவைப்படும். 60 கிலோ எடை கொண்ட ஒருவர், கோடை காலத்தில் 3.6 – 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது கட்டயமாக உள்ளது. அப்போதுதான், உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை ஈடுசெய்ய முடியும். தண்ணீருடன் சேர்த்து இளநீர், மோர், பழச்சாறு ஆகியவற்றையும் அருந்தலாம்.
இன்று பலர் உப்பு நீரை தங்கள் நீரேற்றத்திற்கு பயன்படுத்துகிறார்கள். கோடையில், உப்பு கலந்த நீர் உண்மையிலேயே நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்க முடியும். ஆனால், அதன் அளவு குறைவாக இருக்க வேண்டும் மற்றும் நாள் முழுவதும் உப்பு நீரை மட்டுமே குடிக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல், பிபி நோயாளிகள் மற்றும் சில உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் இதில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
கோடையில், வியர்வையால் உப்பு மற்றும் நீர் இரண்டும் நம் உடலில் இருந்து வெளியேறும். சோடியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் உடலுக்குத் தேவை. உடலின் திரவ சமநிலையை சீராக்க எலக்ட்ரோலைட்டுகள் மிகவும் முக்கியம். அவை இல்லாவிட்டால், உடலின் தசைகளும் சரியாக செயல்படாது. அப்படிப்பட்ட நிலையில், அதிக உடற்பயிற்சிக்கு சென்றால் உடல் சோர்வடைந்து பலவீனம் ஏற்படும். இதனால் தலைசுற்றல், பி.பி. குறைந்த சுகர் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.