fbpx

இரவு பகல் பாராமல் உழைக்கிறீர்களா?… தூக்கமின்மை உங்கள் இதயத்தை எவ்வாறு பாதிக்கிறது தெரியுமா?…

தூக்கமின்மை பிரச்னை இதய நோய், சிறுநீரக பாதிப்பு, உடல் பருமன், நீரிழிவு, பக்கவாதம் மற்றும் மனச்சோர்வு உட்பட பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது. இதில், தூக்கமின்மை இதயத்தை எவ்வாறு பாதிக்கிறது என பார்ப்போம்.

நீங்கள் தூங்கும்போது, உங்களின் ரத்த அழுத்தம் 10 முதல் 20 சதவீதம் வரை குறையக்கூடும். தூக்கமின்மையால் உங்களின் ரத்த அழுத்தம் இரவு முழுவதும் அதிகமாகவே இருக்கும். இரவில் இதுபோன்ற நிலை, உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கும். இது மாரடைப்புக்கான அபாயத்தை அதிகரிக்கிறது. மூளைக்கு ரத்த ஓட்டத்தை குறைப்பதுடன் பக்கவாதத்துக்கும் வழிவகுக்கும். தூக்கத்துக்கும் இதய நோய்க்கும் நெருங்கிய தொடர்புள்ளது. தூக்கமின்மையால் உண்டாகும் உயர் ரத்த அழுத்தம் நெஞ்சு வலியை ஏற்படுத்தும். மோசமான தூக்கம் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கிறது; நாள்பட்ட அழற்சிக்கு வழிவகுக்கிறது. தமனிகளில் பிளாக்குகளை உருவாக்குவதால் கடினத்தன்மை ஏற்படக்கூடும்; இது இதயத்துக்கு ரத்த ஓட்டத்தை தடை செய்து இதய நோய்க்கு வழிவகுக்கிறது.

தமனிகள் அடைப்பதால் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. தூக்கமின்மை மற்றும் தூக்கக் கலக்கம் ஆகியவை இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தில் கூர்மையான அதிகரிப்புக்கு காரணமாகின்றன. இரவில் ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குவது மாரடைப்புக்கான வாய்ப்பை 20 சதவீதம் அதிகரிக்கிறது. உங்களுக்கு ஏற்கனவே இதய நோய் இருந்தால், ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதால், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காரணமாக திடீர் மரணம் ஏற்படலாம்.

Kokila

Next Post

பரபரப்பு: ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்..! ஒரு தீவிரவாதி பலி..! 3 பாதுகாப்பு வீரர்கள் காயம்...!

Tue Sep 12 , 2023
ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து ரஜோரியில் உள்ள நர்லா பாம்பல் பகுதியில் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார் மற்றவர்கள் தப்பி ஓட்டம். இந்த என்கவுன்டரில் இரு ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு போலீஸ் அதிகாரி என மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். பயங்கரவாதிகள் அந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன் விட்டுச் சென்ற பொருட்களை, ராணுவத்தினர் மீட்டுள்ளனர். […]

You May Like