fbpx

உங்களின் கண் இமைகள் அடிக்கடி துடிக்கிறதா.? இந்த விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.!

நமது உடலில் இருக்கும் உறுப்புகளில் முக்கியமான ஒன்று கண். நம் இந்த உலகையும் அதன் அழகையும் கண்டு ரசிப்பதற்கும் நம் அன்பானவர்களின் முகத்தை கண்டு உரையாடுவதற்கும் நம் கண்களே உதவுகின்றன. அதனால் பெரும்பாலான மக்கள் தம் கண்களின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துகின்றனர். சிலருக்கு அரிதாக கண்ணிமைகள் அடிக்கடி துடித்துக் கொண்டிருக்கும். இது எதனால் ஏற்படுகிறது இதற்கு காரணமானவை எவை என்று பார்ப்போம்.

கண்களின் இமை துடிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மன அழுத்தம். அதிகமான மன அழுத்தங்களில் இருப்பவர்களுக்கு கண் இமைகள் அடிக்கடி துடிக்கும். மேலும் காபி மற்றும் டீ போன்ற
கஃபைன் அதிகம் உள்ள பொருட்களை உட்கொள்வதன் மூலமும் கண் இமைகள் துடிக்கலாம். மேலும் அதிக மது அருந்துவதும் கண்ணிமை துடிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாகும். இதுபோன்று இருக்கக்கூடிய பல்வேறு காரணங்களை பற்றி நாம் விரிவாக பார்ப்போம்.

மன அழுத்தம் மற்றும் கஃபைன் போன்ற காரணிகளோடு தூக்கமின்மை, மது அருந்துதல், புகைப்பிடித்தல், ஸ்கிரீன் பிரைட்னஸ், கண் வறட்சி ஆகியவையும் இமைகள் துடிப்பதற்கு காரணமாக இருக்கிறது. பெரும்பாலும் இவை கண் உறுத்தலை ஏற்படுத்தும். மேலும் அதிக வலி இல்லாமல் இருக்கும் சில நேரங்களில் எந்தவித மருத்துவமும் இன்றி தானாகவே நின்றுவிடும். மேலும் சில ஆய்வுகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் கண் இமைகள் துடிப்பதாக தெரிவிக்கின்றது.

கண் இமைகள் துடிப்பதை தவிர்ப்பதற்கு டீ மற்றும் காபி போன்ற கஃபைன் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். மது அருந்துபவர்களும் புகைப்பிடிப்பவர்களும் அவற்றைத் தவிர்த்துக் கொள்வதன் மூலம் இமை துடிப்பதை தடுக்கலாம். மன அழுத்தம் பிரச்சனையில் இருப்பவர்கள் அதனை சரி செய்வதன் மூலம் கண்ணிமைகள் துடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். மேலும் அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்வதையும் கிரீன் பிரைட்னஸ் அதிகமாக வைத்திருப்பதையும் தவிர்க்க வேண்டும். இவற்றையெல்லாம் கடைப்பிடித்த பின்பும் கண்ணிமை துடிப்பது நிற்க வில்லை என்றால் கண் மருத்துவரை பார்ப்பது நலம்.

Kathir

Next Post

BREAKING: 9வது முறையாக உலக கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா…! 3விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி…

Thu Nov 16 , 2023
உலக கோப்பை 2023ன் 2வது அரை இறுதி போட்டியில் தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணி வீரர்களில் ஹென்ரிச் கிளாசன் 47 மற்றும் டேவிட் மில்லர் 101 ரன்கள் எடுத்தனர், இவர்களை தவிர மற்ற வீரர்கள் யாரும் சொல்லும்படியாக ரன்களை எடுக்கவில்லை. இதனைத்தொடர்ந்து தென்னாபிரிக்க அணி 49.4 ஓவர்கள் முடிவில் 10 […]

You May Like