சளி வந்து விட்டால், பெரும் பாடு படுத்தி விடும். சாதாரணமாக அனைவருக்கும் வரக்கூடியது தான் சளி. ஆனால் வந்து விட்டால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தி விடும். குறிப்பாக சிறுவர்களுக்கு வந்துவிட்டால், அது அவர்களுக்கு மட்டும் இல்லாமல், நமக்கு பெரிய பிரச்சனையாக மாறிவிடும்.
இதனால் பெற்றோர்கள், சளி வர ஆரம்பிக்கும் போதே மெடிக்கலில் சிரப் வாங்கி கொடுத்து விடுவார்கள். ஆனால் இது முற்றிலும் தவறு. இது போன்ற மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படும். மேலும், சளிக்கு மருந்து கொடுக்காமல் விட்டுவிட்டாலும் பிரச்சனை தான். இது போன்ற பிரச்சனைக்கு சிறந்த தீர்வு குறித்து மருத்துவர் ஆஷா லெனின் பரிந்துரைத்துள்ளார்
நமது முன்னோர் பெரும்பாலும் வீட்டு வைத்தியத்திலேயே தான் பல நோய்களை குணப்படுத்தினார். அந்த வகையில், சளி, இருமல் போன்ற தொல்லைகளுக்கு காலங்கலாமாக பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகை என்றால் அது ஆடாதோடை தான். பொதுவாக இந்த மூலிகையை ஜஷ்டிஷியா என்று ஹோமியோபதி மருத்துவ முறையில் கூறுவார்கள்.
அதன்படி, ஹோமியோபதி மருத்துவரிடம் இருந்து ஜஷ்டிஷியா ஆடாதோடை மருந்தை 10 மில்லி லிட்டர் வாங்கிக் கொள்ளலாம். இந்த மருந்து மூலம் குழந்தைகளுக்கு இருக்கும் சளி, இருமல் பிரச்சனையை சுலபமாக குணப்படுத்தலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மருந்தை, பள்ளி செல்லும் குழந்தைகளின் வாட்டர் பாட்டிலில் கலக்கலாம்.
அதாவது, ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு துளி மட்டும் இந்த மருந்தை கலந்தாளே போதும். இந்த மருந்தை கலப்பதால் தண்ணீரின் சுவையும், மனமும் மாறாது. இதனால் குழந்தைகளால் வல்லகமாக தண்ணீர் குடிப்பது போல் குடித்து விடுவார்கள். இப்படி செய்து வந்தால் நம் நுரையீரல் கழுவி விட்டதை போல் சுத்தமாகி விடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்தை 8 துளிகளும், பெரியவர்களுக்கு 30 துளிகளும் கொடுக்கலாம் என மருத்துவர் ஆஷா லெனின் பரிந்துரைத்துள்ளார். எனினும், இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஹோமியோபதி மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது என்று அவர் தெரிவித்துள்ளார்.