ஒரு சில நேராங்களில், நாம் ஆரோக்கியமானது என்று நினைத்து சாப்பிடும் ஒரு சில பொருள்கள் நமக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும். ஆம், நாம் சாப்பிடும் உணவு பொருட்கள் அனைத்துமே நமக்கு ஆரோக்கியதை கொடுக்கும் என்று நாம் நம்பிவிடக் கூடாது. ஒரு சில பொருள்களில் இருக்கும் நச்சுத் தன்மை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.
அந்த வகையில் பலர் ஆரோக்கியம் என்று நினைத்து சாப்பிடும் பருப்பு வகை ஒன்று பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஆரோக்கியம் இல்லாத பருப்பு வகைகளில் ஒன்று கேசரி பருப்புகள் தான். இதனால், எக்காரணம் கொண்டும் நாம் இந்த பருப்பை சாப்பிடக் கூடாது என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது, சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் உணவு இல்லாமல், பஞ்சம், பசி, ஏற்பட்டது. அந்த பஞ்ச காலத்தில், இந்த கேசரி பருப்புகள் மட்டும் தான் மக்களுக்கு சுலபமாக கிடைத்தது. இந்த பருப்புகள் சுவையாக இருப்பது மட்டும் இல்லாமல், குறைவான நேரத்திலேயே நன்கு வெந்து விடும். அதே சமயம், தண்ணீர் இல்லாமலே இதன் பயிர் விளையும்.
இதனால் தான் பஞ்ச காலத்தில் இந்த பருப்புகள் சுலபமா கிடைத்தது. இந்நிலையில், அநேக வட இந்தியா பகுதி மக்களுக்கு முடக்கு வாதம் நோய் ஏற்பட்டது. இது குறித்து ஆராய்ந்த போது, கேசரி பருப்புகளை மக்கள் அதிகமாக எடுத்துக் கொண்டதால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. ஏனென்றால், இந்த கேசரி பருப்புகளில், பீட்டா ஆக்சிலில் அமினோ அலனின் என்ற நச்சுத்தன்மை உள்ளது.
இந்த பருப்புகளின் நச்சுத் தன்மை குறித்து அறிந்த இந்திய அரசாங்கம், கேசரி பருப்பை யாரும் பயிரடக் கூடாது என்றும், இதனை மக்கள் சாப்பிடக் கூடாது என்றும் 1962-ஆம் ஆண்டு அறிவித்தது. இதனால், மக்கள் யாரும் சுவைக்காக இந்த கேசரி பருப்புகளை சாப்பிட்டு விட்டு, முடக்கு வாத நோயால் அவதிப்பட வேண்டும் என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.