fbpx

டிராஃபிக்கில் சிக்கிக் கொண்ட மருத்துவர் … 3 கிலோ மீட்டருக்கு ஓடியே மருத்துவமனைக்கு சென்று அறுவைசிகிச்சை செய்தார்..

பெங்களூருவில் டிராஃபிக்கில் சிக்கிக் கொண்ட மருத்துவர் ஒருவர் காரைவிட்டுவிட்டு 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடியே  மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சையை உரிய நேரத்தில் செய்து முடித்துள்ளார். …

பெங்களூருவில் மணிபால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார் கோவிந்த் நந்தகுமார். இவர் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முக்கியமான அறுவை சிகிச்சை நோயாளிக்கு மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்நிலையில் அவர் வந்த கார் டிராஃபிக்கில் சிக்கிக்கிக் கொண்டது. சிறிது தூரம் நகர்வதற்கே பல மணி நேரம் ஆனது. இதனால் தான் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சையை உரிய நேரத்தில் தொடங்க முடியாதே என நினைத்த கோவிந்த நந்தகுமார் காரில் இருந்து இறங்கி மருத்துவமனைக்கு 3 கிலோ மீட்டருக்கு ஓடிச் சென்றார்.

அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்த பெண் நோயாளிக்கு அந்த நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் போனால் நிலைமை மோசமடையும் என நினைத்துள்ளார். இதனால் சரியான நேரத்திற்கு மருத்துவமனையை அடையவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் காரிலிருந்து இறங்கி ஓடியுள்ளார். இந்த காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது அவர் கூறுகையில் , ’’ நான் மத்திய பெங்களூருவில் இருந்து மணிபால் மருத்துவமனைக்கு தினமும் செல்கின்றேன். இம்மருத்துவமனை சர்ஜாபூரில் உள்ளது. தென்கிழக்கின் பெங்களூருவில் அமைந்துள்ளது. சரியான நேரத்தில்தான் கிளம்பினன். எனது குழுவினரும் அறுவை சிகிச்சைக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டனர். எனவே நான் விரைவில் சென்றாக வேண்டும். போக்குவரத்து கடுமையான நெரிசல் இருந்தது. தெரிந்துவிட்டது தாமதமாகும் என .. எனவே நான் காரை டிரைவரிடம் விட்டு விட்டு மருத்துவமனையை நோக்கி வந்துவிட்டேன். இதனால் தாமதம் ஏற்படவில்லை’’ என்றார்

Next Post

ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்வது தான் திராவிட மாடல் போச்சா?.. வீடியோ வெளியிட்டு ஆ.ராசா மீது அண்ணாமலை குற்றச்சாட்டு..!

Tue Sep 13 , 2022
திமுக எம்.பி.ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசியதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசும் வீடியோ ஒன்றை பகிர்ந்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணாமலை கூறியிருப்பதாவது;-மன்னிக்கவும், இது தமிழ்நாட்டின் அரசியல் பேச்சு நிலை. திமுக எம்.பி. மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து மற்றவர்களை திருப்திப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளார். தமிழகம் தங்களுக்கு […]

You May Like