வெயிலின் தாக்கம் அதகரித்து உள்ள நிலையில், உடல் சூடு அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இப்படி உடல் சூட்டை குறைப்பதாக நினைத்து பலர் கடைகளில் உள்ள ஜூஸ் வாங்கி குடிப்பது, ஏசியில் இருப்பது போன்ற செயல்களை செய்கின்றனர். ஆனால் உண்மையில், இது போன்ற செயல்கள் உடலை மேலும் சூடாக்கும். உடல் சூடு அதிகரிக்க என்ன காரணம் என்பதை தெரிந்துக் கொண்டால் தான், அதற்கான தீர்வை கண்டறிய முடியும்.
அந்த வகையில், கோடை வெப்பத்தில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். பொதுவாக, கோடை காலங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை தான் நாம் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் உடல் சூடு குறையும். குறிப்பாக, அரைக் கீரை மசியல் (Keerai Masiyal) நல்ல பலனை தரும்.
ரைக்கீரையை குலைவாக கடைந்து உணவுடன் சேர்த்து, கீரை சாதமாக சாப்பிட்டால் உடல்சூடு, சிறுநீர் எரிச்சல் இருப்பவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். மேலும், இந்த கீரை எளிதில் ஜீரணம் ஆகும் என்பதால், குழந்தைகளுக்கும் இதை தாரளமாக கொடுக்கலாம். இந்த கீரையை சமைக்கும் போது, அதன் நடு தண்டுகளை விட்டு விட்டு, மீதமுள்ள கீரைகளை மட்டும் தான் வேக வைத்து அதனை மசியலாக செய்து சாப்பிட வேண்டும்.
விலை மலிவாக கிடைக்கும் இந்த கீரையில், இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்கள் அதிகம் உள்ளது. இதனால், கண் பார்வை மேம்படுவது மட்டும் இல்லாமல், கண்களில் ஏற்படும் மற்ற பிரச்சனைகளையும் குணப்படுத்த முடியும். அது மட்டும் இல்லாமல், சளி மற்றும் இருமலுக்கு இந்த கீரை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. அரைக் கீரையை பிரியாணி தயாரிக்கும் முறையில் செய்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
ரத்தசோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு தான் இந்த அரைக்கீரை.