fbpx

ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை…! மேல்முறையீடு செய்ய எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்…? முழு விவரம்

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்ய என்னென்ன ஆவணங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு 1.65 கோடி மகளிர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்த ஏராளமான பெண்கள் தங்களுக்கு இந்த உரிமைத்தொகை திட்டத்தில் பலன் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.

திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களின் நிலை குறித்த குறுஞ்செய்தி, விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். அதே போல இ-சேவை மையங்களை தவிர்த்து நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று மேல்முறையீடு செய்யலாம்.

இதில் இ-சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கும் பெண்கள் பலர் எந்தெந்த ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரியாமல் உள்ளனர். மேல்முறையீட்டுக்கு செல்லும் பெண்கள் ஆதார் அட்டையும், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்து செல்ல வேண்டும். அதேபோல உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். தற்போது நடைபெற்று வரும் முகாம்களில் மேல்முறையீட்டு அதிகாரியிடம் விண்ணப்பம் செய்யலாம்.

Vignesh

Next Post

குட் நியூஸ்: கட்டட அனுமதி... 30 நாட்கள் தான் டைம்.. அதற்குள் இறுதி முடிவை தெரிவிக்க வேண்டும்...! அரசு அதிரடி உத்தரவு..

Fri Sep 29 , 2023
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காகிதமற்ற முறையில் இணைய தளம் வாயிலாக கட்டட விண்ணப்பங்கள் பெறுதல், பரிசீலித்தல், கட்டணம் வசூலித்தல், கட்டிட அனுமதி வழங்குதல், அனுமதி வழங்கிய பின் தொடர் நடவடிக்கையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; நகர்ப்புற உள்ளாட்சிகளில் கட்டட அனுமதி மற்றும் திட்ட அனுமதி வழங்குவதனை எளிமைப்படுத்திட மத்திய அரசின் மாதிரி கட்டட விதிகள் மற்றும் தேசிய கட்டட […]

You May Like