இந்தியாவின் பிரதான உணவுகளில் சப்பாத்தியும் ஒன்றாகும். பெரும்பாலான மக்கள் இரவு நேரங்களில் சப்பாத்தியை சாப்பிட்டு வருகின்றனர். பொதுவாக பலரும் தோசைக்கல் அல்லது தவாவில் சப்பாத்தியை சமைக்கின்றனர். எனினும் சிலர் சப்பாத்தியை நேரடியாக தீயில் சமைக்கும் வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.. ஆனால் சப்பாத்தியை நேரடியாக தீயில் சமைப்பதால், புற்றுநோயை உண்டாக்கும் சேர்மங்கள் உருவாகலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இது உண்மையா? பிரபல புற்றுநோய் நிபுணர் டாக்டர் பபிதா பன்சால், சப்பாத்தியை நேரடியாக தீயில் சமைப்பது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நேரடியாக தீயில் சமைக்கப்படும் உணவுகள் அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தப்படுகின்றன, இதனால் சில இரசாயனங்கள் உருவாகலாம் என்று டாக்டர் பபிதா கூறினார். தொடர்ந்து பேசிய அவர் “அதிக வெப்பம் அக்ரிலாமைட் என்ற இரசாயன மூலக்கூறின் வளர்ச்சியை ஏற்படுத்தும். இது புற்றுநோய் ஏற்படுவதற்கு முதன்மை காரணியாகும்.
அதிக வெப்பநிலையில் உணவை சமைப்பது, அக்ரிலாமைடு மட்டுமின்றி, PAH மற்றும் HCA ஆகிய சேர்மங்களை உருவாக்கலாம். உருவாக்கலாம். இந்த 2 சேர்மங்களும் பிறழ்வுத்தன்மை கொண்டவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது அவை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய வழிகளில் டிஎன்ஏவை மாற்றும்.
அதிக வெப்பநிலையில் சமைக்கப்படும் போது, மாவுச்சத்து நிறைந்த உணவுகள் அக்ரிலாமைட்டின் முதன்மை ஆதாரமாக இருக்கும். மறுபுறம், இறைச்சியை வறுப்பது PAH மற்றும் HCA சேர்மங்களின் உருவாக வழிவகுக்கிறது. இந்த கலவைகள் புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற பிற உணவுகளிலும் ஏற்படலாம்,” என்று தெரிவித்தார்.
புற்றுநோய் அபாயத்தை எப்படி குறைப்பது?
சப்பாத்தி கருகாமல் இருக்க மிதமான தீயில் சமைக்கவும். சீரான சமையலை உறுதி செய்து, கருகிப்போகும் அபாயத்தைக் குறைக்க அடிக்கடி சப்பாத்தியை புரட்டி போடவும்.
ரொட்டியை நேரடியாக தீயில் சமைத்தால் சுவை நன்றாக இருக்கும் என நீங்கள் விரும்பினால் அதனை அளவோடு சாப்பிடுங்கள். மேலும் உங்கள் உணவை பலவிதமான ஆரோக்கிய உணவுகளுடன் சமநிலைப்படுத்தவும்.
சப்பாத்தியை நேரடியாக சுடரில் சமைப்பதை விட, அதனை ஒரு தவாவில் சமைப்பது நல்லது. இதன் மூலம் அக்ரிலாமைடு உற்பத்தியைத் தடுக்க முடியும்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதற்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதற்கும் உதவுவதன் மூலம் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.
நேரடியான தீயில் சப்பாத்தியை சமைப்பது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை, இருப்பினும் அவ்வாறு செய்வது அபாயகரமான இரசாயனங்கள் உருவாகலாம் என்று சில சான்றுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அக்ரிலாமைடு, PAH, HCA சேர்மங்கள் உருவாகும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அதிக தீயில் சமைப்பதை தவிர்ப்பதன் மூலம், வெவ்வேறு சமையல் நுட்பங்களை முயற்சிப்பதன் மூலமும், சரிவிகித உணவை உட்கொள்வதன் மூலமும் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.
Read More : இதய நோய், பக்கவாதம் ஆபத்தை குறைக்கும் வாக்கிங்.. ஆனா இப்படி நடந்தால் தான் முழு பலனும் கிடைக்கும்..