தற்காலிக பதவியை வைத்து கொண்டு இன்னொரு கட்சியை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி உள்ளதா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்..
மதுரையில் அமைச்சர் மூர்த்தியின் இல்லத்திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர், திமுக அரசின் சாதனைகள் குறித்தும், பல்வேறு திட்டங்கள் குறித்தும் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.. தொடர்ந்து பேசிய அவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தார்.. அப்போது “ திமுக எம்.எல்.ஏக்கள் தன்னுடன் பேசுவதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.. அவர்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களே அவர்களிடம் பேசுவதில்லை.. எங்கள் எம்.எல்.ஏ அவர்களிடம் பேசுவதாக கதை விடுகிறார்.. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி, சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி..
இன்றைக்கு அதிமுக கட்சியே பிளவுபட்டுள்ளது.. ஓபிஎஸ், இபிஎஸ் என 2 அணிகளாக பிளவுபட்டுள்ளது.. எடப்பாடி பழனிசாமி வைத்திருக்கும் பதவியே தற்காலிகமானது தான்.. தற்காலிக பதவியை வைத்து கொண்டு இன்னொரு கட்சியை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி உள்ளதா..?” என்று கேள்வி எழுப்பினார்..