fbpx

கிங்ஸ்லியின் மனைவிக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா..? வைரலாகும் புகைப்படம்..!!

நடிகை சங்கீதா சென்னையை சேர்ந்தவர் என்றாலும், இவர் நடிகையாக அறிமுகமானது மராத்தி மொழியில் தான். ஹிந்தியில் சில படங்களில் சிறு சிறு ரோலில் நடித்தார். பின்னர், தமிழில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சின்னத்திரை நடிகையாக மாறினார். அரண்மனை கிளி, திருமகள் போன்ற சீரியல்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த சங்கீதா, விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்து கவனம் பெற்றார். தற்போது சன் டிவியில் ‘ஆனந்த ராகம்’ சீரியலில் நடித்து வருகிறார்.

நடிகை சங்கீதா, பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை பல வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், டிசம்பர் 10ஆம் தேதி பெங்களூருவில் இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. கிங்ஸ்லி வீட்டு வழக்கத்தின் படி கிருஸ்தவ முறைப்படியும், சங்கீதா வீடு வழக்கத்தின் படி இந்து முறைப்படி இரண்டு தாலி கட்டினார். ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா திருமணத்தில் சில குறிப்பிட்ட பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்திற்கு பின்னர் பலர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வந்தனர். அதில் ஒன்று தான் சங்கீதாவுக்கு இது முதல் திருமணமா? என்பது. இதுகுறித்து வெளியான தகவலில் ஏற்கனவே சங்கீதாவுக்கு அவரின் பெற்றோர் கடந்த 2009ஆம் ஆண்டு, கிரிஷ் என்பவரை திருமணம் செய்து வைத்தனர் என்பது தெரியவந்தது. திருமணம் ஆகி பல ஆண்டுகள் இந்த ஜோடி ஒன்றாக வாழ்ந்த நிலையில், ஒரு பெண் குழந்தையும் சங்கீதாவுக்கு உள்ளது.

குழந்தை பிறந்த பின்னர் சங்கீதா மற்றும் கிரிஷ் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்து வரை கொண்டு வந்து நிறுத்தியது. விவாகரத்துக்கு பின்னர், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சங்கீதாவின் மகள் புகைப்படம் வெளியாகியுள்ளது. ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா ஜோடி திருமணம் தற்போது மைசூர் சென்றுள்ள நிலையில், சங்கீதா பெண் குழந்தை ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து, இது தான் உங்கள் குழந்தை ஷிவியாவா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Chella

Next Post

’அரசுப் பள்ளி ஆசிரியைகள் இனி சுடிதார் அணிந்து வரலாம்’..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!!

Tue Dec 19 , 2023
அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியைகள் விதிகளுக்கு உட்பட்டு சுடிதார் அணிந்து பள்ளிக்கு வரலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான ‘கனவு ஆசிரியர்’ விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், ”ஆசிரியர்கள் இல்லாவிட்டால் நாங்கள் இப்போது […]

You May Like