ஏழைகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வைரல் செய்திகள் வலம் வருகின்றன.. அந்த வகையில் அரசின் ‘நாரி சக்தி யோஜனா’ திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து பெண்களுக்கும் உத்தரவாதமும் இல்லாமல் வட்டியும் இல்லாமல் எஸ்பிஐ ரூ.25 லட்சம் கடனை வழங்குகிறது என்று ஒரு போலி செய்தி பரவி வருகிறது.. ஆனால் இந்த செய்தி போலி செய்தி என்பது தெரியவந்துள்ளது..
இந்திய பத்திரிகை தகவல் பணியகமான PIB இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.. அந்த ட்விட்டர் பதிவில் “ சில யூடியூப் சேனல்கள் பல்வேறு அரசாங்கத் திட்டங்கள் தொடர்பான விவரங்களை வழங்குகின்றன.. அதுபோன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தவில்லை.. ஜாக்கிரதை! மோசடி செய்பவர்களால் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் சேகரிக்கப்படும் போலி செய்திகளுக்கு இரையாக வேண்டாம்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதனிடையே சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை மக்கள் கிளிக் செய்ய வேண்டாம் என்று PIB அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகள் ஏதேனும் கிடைத்தால், அதன் நம்பகத்தன்மையை நீங்கள் எப்போதும் அறிந்து கொள்ளலாம்.. அது உண்மையான செய்தியா அல்லது அது பொய்யான செய்தியா என்பதைச் சரிபார்க்கலாம். அதற்கு, https://factcheck.pib.gov.in என்ற முகவரிக்கு செய்தியை அனுப்ப வேண்டும். நீங்கள் உண்மைச் சரிபார்ப்புக்கு +918799711259 என்ற எண்ணுக்கு WhatsApp செய்தியை அனுப்பலாம். உங்கள் செய்தியை pibfactcheck@gmail.com க்கும் அனுப்பலாம். உண்மைச் சரிபார்ப்புத் தகவலும் https://pib.gov.in என்ற இணையதள முகவரியிலும் கிடைக்கிறது.