fbpx

மத்திய அரசுக்கு அதிக வரி வசூலித்துத் தர மட்டும் தமிழகம் வேண்டுமா? நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்..! மநீம கண்டனம்

விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்வதாக மக்கள் நீதி மய்யம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. குறிப்பாக, பாஜக ஆளும் குஜராத்துக்கு ரூ.608 கோடியும், அதைவிட பெரிய மாநிலமான தமிழகத்துக்கு ரூ.33 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது எவ்வகையிலும் நியாயமற்றது. அசாம், பீகார், டெல்லி, ஹரியானா, இமாச்சல், கேரளா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களைவிட தமிழகத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு அதிக வரி வசூலித்துத் தர மட்டும் தமிழகம் வேண்டுமா? நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்..! மநீம கண்டனம்

அதேபோல, பயிற்சியாளர்களும் டெல்லிக்கு 121 பேர், அசாமுக்கு 56 பேரை பணியில் அமர்த்திவிட்டு, தமிழகத்துக்கு 18 பேரை மட்டும் பணியில் அமர்த்தியுள்ளனர். தமிழக வீரர்கள் சர்வதேச அளவில் சாதிக்கின்றனர். அவர்களை ஊக்குவிப்பதை விடுத்து, மாநிலத்துக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது நியாயமா? மத்திய அரசுக்கு அதிக வரி வசூலித்துத் தரவும், சர்வதேச ஒலிம்பியாட் போட்டி நடத்தவும் மட்டும் தமிழகம் வேண்டுமா? நிதி ஒதுக்குவதில் ஓரவஞ்சனைதானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

Chella

Next Post

புதுச்சேரி சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைப்பு.. சபாநாயகர் அறிவிப்பு..

Wed Aug 10 , 2022
புதுச்சேரி சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.. புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சுமார் 1 மணி நேரம் உரையாற்றினார்.. அப்போது புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது என்றும், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.10,416 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ரூ.9,709 கோடி (94%) செலவிடப்பட்டுள்ளது என்று தமிழிசை கூறினார்.. ஆனால் ஆளுநர் உரையில் எந்த புதிய […]

You May Like