தற்போதைய உணவு முறைகளில் ஆயிரம் வகைகள் வந்திருந்தாலும், நம்முடைய பழங்காலத்து உணவு முறைகளில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்திகள் தற்போது வரக்கூடிய துரித வகை உணவுகளில் இருப்பதில்லை, அதன் காரணமாக, மருத்துவமனை நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி விட்டது.
அதே சமயம் இன்னமும் நம்முடைய பாரம்பரிய உணவு முறையை கடைப்பிடிக்கும் ஒரு சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி கடைப்பிடிப்பவர்களுக்கு அவ்வளவு எளிதாக எந்தவித நோயும் அவர்களை ஆக்கிரமிப்பதில்லை.
அதே சாயத்தில் இந்த புதிய வகை உணவுகளை தவிர்த்து நம்முடைய பாரம்பரிய உணவுகளை சாப்பிடும் பழக்கத்திற்கு தற்போது மக்கள் திரும்பி வருகிறார்கள்.
அந்த வகையில் மாம்பழத்தில் விட்டமின் ஏ உயிர்சத்து மற்றும் கலோரிகள் நிறைந்து இருக்கிறது. இதை சாப்பிடுவதால் நம்முடைய ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும் மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆகவே இந்த மாம்பழத்தை பொதுமக்கள் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது தனியாகவும் சாப்பிடலாம்.