fbpx

இரவில் குழந்தை தூங்காமல் அழுகிறதா..! வயிற்றில் பூச்சி இருந்தால் அறிகுறிகளுடன் கண்டறிவது எப்படி..?

குழந்தைகளின் வயிற்றில் பூச்சி இருந்தால் அறிகுறிகளுடன் கண்டறிந்து கொள்வது பற்றி பார்ப்போம்.

பொதுவாக அம்மாக்களை பெரிதும் கவலை அடைய செய்வது குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி வருவதே ஆகும். ஒட்டுண்ணிகளாக இருக்கும் இந்த புழுக்கள் குழந்தைகளின் உடலில் வந்ததும் அவர்களின் உணவுகளை இவை தின்று குழந்தைகளின் வளர்ச்சியை குறைத்துவிடுகிறது. இதன் காரணமாக குழநதைகள் வயிற்றில் புழுக்கள் வந்ததும் அதனை அழித்து விட வேண்டும். இல்லை எனில் அது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கக்கூடிய நோய்களை அளித்து, எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும்.

வயிற்றில் புழுக்கள் அதிகமாக இருந்தால் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் செரிமான மண்டலத்திற்குள் செல்லாமல் வயிற்று போக்கை ஏற்படுத்தும். அது மட்டுமின்றி வாயு தொல்லை, குமட்டல், மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் ஒரு விதமான எரிச்சலையும் உண்டாக்கும். இதற்கு நார்சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் இப்படிபட்ட பிரச்சனைகளை தடுக்கலாம்.

குழந்தையின் வயிற்றில் பூச்சி இருந்தால், மலவாயில் அரிப்பு ஏற்படும், இதன் காரணமாக இரவு நேரத்தில் தூக்கம் கெட்டு சோர்வாக காணப்படுவார்கள். அடிக்கடி இந்த மாதிரியான பிரச்சனை ஏற்பட்டால் வயிற்றில் பூச்சிகள் அதிகளவில் இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். இதனால் நாம் அவர்களுக்கு எவ்வளவு சத்து நிறைந்த உணவுகளை கொடுத்தாலும் அவற்றின் சத்துக்களை புழுக்கள் உறிஞ்சு, குழந்தைகளை சோர்வாகவே வைக்கும். இதனால் வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த புழுக்களை அழிக்க வேண்டியது அவசியமாகும்.

பசி எடுக்காமல் இருக்கும், உடல் எடை குறையும் அப்படி என்றால் வயிற்றில் புழுக்கள் இருக்கிறது என்று உணர்ந்து கொள்ளலாம். உங்கள் குழந்தைகள் இரவில் தூங்க செல்லும்போது பற்களை கொறித்தால் வயிற்றில் புழுக்கள் இருப்பதாக அர்த்தம். உடலில் இருக்கும் புழுக்களால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்படுத்தி என்ன செய்வதென்று அறியாமல் செய்வார்கள்.

அதேபோல் உடலில் ஏற்படும் இரத்த சோகை போன்றவை ஏற்பட காரணம், உருளை புழுக்கள் இருப்பது ஆகும். உங்கள் குழந்தைகள் சாப்பிடும் இரும்பு சத்து, வைட்டமின் அடங்கிய உணவை உறிஞ்சு கொல்வதாலே இது நிகழ்கிறது. உடலில் ஒட்டுண்ணிகள் இருந்தால் சரும அரிப்பு மற்றும் எரிச்சல் கூட சில சமயத்தில் உண்டாகும். இந்த மாதிரியான அறிகுறிகள் உங்கள் குழந்தைகளுக்கு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

Kathir

Next Post

கடலுக்கடியில் தோன்றி, மறையும் அதிசய சிவன் கோயில்..! ஒரு நாளில் 2 முறை மட்டுமே தரிசனம்..! எங்கு உள்ளது தெரியுமா.?!

Mon Jan 8 , 2024
பொதுவாக நம் இந்தியாவில் அமைந்துள்ள கோயில்கள் பலவற்றில் பக்தி மட்டுமல்லாமல் அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்துள்ளன என்று கூறப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட கோயில்களை பற்றி அறியும்போது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அற்புதங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கிய கோயில் தான் குஜராத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில். ஸ்தம்பேஸ்வர மகாதேவ் கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயில் ஒரு நாளில் 2 முறை மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் தரும். மிகவும் பழமையான சக்தி வாய்ந்த […]

You May Like