fbpx

”இந்த பாத்திரங்களில் தண்ணீர் வைத்து குடித்தால் இப்படிக்கூட நடக்குமா”..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

முன் காலங்களில் கோவில் கிணறுகளில் தண்ணீருக்குள் காசுகளை தூக்கி எறிவதாக கேள்வி பட்டிருப்போம். காணிக்கை என கூறினாலும் நம் முன்னோர்கள் அறிவியல் நோக்கம் இல்லாமல் செய்ய மாட்டார்கள். அந்த காலத்தில் காசுகள் பித்தளையால் செய்யப்பட்டிருந்தது. அந்த பித்தளை காசுகளை கிணற்று நீரில் காணிக்கையாக போட்டு வர பித்தளை நீருடன் வினைப்புரிந்து அந்த நீரை பருகுபவர்களின் உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது. இந்த கிணற்று நீர் தான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இவ்வளவு மகத்துவம் அந்த பித்தளை நீருடன் வினைப்புரிந்ததால் உண்டானது என்பதை இப்போது நாம் புரிந்து கொள்ள முடியும். சரி பித்தளை பாத்திரத்தில் உள்ள நீரை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • உடலில் கடுமையான நோய்களை உருவாக்கும் ஈ-கோலி மற்றும் எஸ்.ஆரியஸ் போன்ற நுண் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
  • கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை சீர்ப்படுத்தி உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை நீக்குகிறது. இதனால், வயிறு சுத்தமடைந்து ஜீரண சக்திக்கு உதவுகிறது.
  • இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு ஏற்றது.
  • சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உதவும் மெலனின் உற்பத்திக்கு உதவுகிறது.
  • உடலில் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இரத்த சோகை நோயை தடுக்கிறது.
  • பித்தளையில் ஆன்டி-ஆக்சிடன்ட் இருப்பதால் புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது.
  • தைராய்ட் சுரப்பியின் செயல்பாட்டை சரிசெய்கிறது.
  • எலும்புகளை பெலப்படுத்துகிறது. கீல்வாதம் மற்றும் முடக்குவாதத்தை சரி செய்ய உதவுகிறது.

Chella

Next Post

பெண்ணின் உயிரை பறித்த பைக் ரேஸ்..!! நடைபயிற்சி சென்றவருக்கு நேர்ந்த சோகம்..!!

Mon Jan 30 , 2023
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோவளம் பைபாஸ் சாலையில் நேற்று அதிகாலை இளைஞர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, திருவளம் பகுதியைச் சேர்ந்த 53 வயதான சிந்து என்ற பெண் சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். நடைபயிற்சியின் போது சிந்து பைப்பாஸ் சாலையை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது, ரேசில் 24 வயது இளைஞர் ஓட்டி வந்த பைக் சிந்து மீது அதிவேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில், பலத்த காயமடைந்த […]
பெண்ணின் உயிரை பறித்த பைக் ரேஸ்..!! நடைபயிற்சி சென்றவருக்கு நேர்ந்த சோகம்..!!

You May Like