fbpx

பெற்றோர்களே..!! இந்த தவறை எப்போதும் செய்துவிடாதீர்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

குழந்தைகள் பிறந்தது முதல் வளரும் வரை அவர்களிடம் பல மாற்றங்களை நம்மால் பார்க்க முடியும். அவற்றில் முக்கியமான ஒன்று தான் ‘பொய்’. ஆம், குழந்தைகள் ஒரு காலகட்டத்தில் பொய் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். தாங்கள் செய்த தவறுகளில் இருந்து தப்பிக்கவும், பெற்றோருக்கு பயந்தும் பொய் சொல்ல ஆரம்பிக்கின்றனர். ஆனால், குழந்தைகள் அப்படி பொய் சொல்கிறார்கள் என்று நீங்கள் உணர்ந்தால், அவர்களை எப்படி கையாள வேண்டும்..? என்பதை இந்தப் பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உண்மையில், உங்கள் குழந்தை ஒரு சிறிய விஷயத்திற்கு கூட பொய் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் அதிக புத்திசாலிகள். மேலும், அவர்கள் சொன்ன பொய் குறித்து அன்பாய் அவர்களைத் திருத்துங்கள். ஆனால், அதுவே அவர்கள் பெரிய பொய்களை சொல்லும்போது, அசால்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் குழந்தை பொய் சொல்வதை அறிந்தால் கோபப்படவோ, அடிக்கவோ, திட்டவோ செய்யாதீர்கள். அவர்களை அன்பாய் கையாளுங்கள். அவர்கள் செய்தது தவறு என்று தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.

என்ன செய்தாலும் சரி உண்மையை சொல்ல தைரியம் வேண்டும். பொய் சொல்லுபவர்கள் தான் பயப்படுவார்கள். இப்படி உங்கள் குழந்தையிடம் சொல்லிப் பாருங்கள். அவர்கள் பொய் சொல்லும் பழக்கத்தை மாற்ற வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகள் ஏதாவது தவறு செய்தால், அதை மறைக்க பொய் சொல்கிறார்கள். எனவே, உங்கள் குழந்தைகளிடம் தவறு செய்வது சகஜம் தான். அதற்காக ஒருபோதும் பொய் சொல்லக் கூடாது. அந்த தவறை ஒப்புக்கொண்டு அதிலிருந்து பாடம் கற்றுக் கொள் என்று அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

Read More : ’என் கணவருக்கு எதையோ கலந்து குடுத்துவிட்டார்கள்’..!! பிஜிலி மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

English Summary

If you feel that children are lying, how should you handle them..? Read this post and find out.

Chella

Next Post

அதிர்ச்சி..!! முன்னாள் WWE வீரர் சிட் விசியஸ் காலமானார்..!! பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்..!!

Tue Aug 27 , 2024
WWE legend Sid Vicious dies at 63 after tragic years-long battle with cancer

You May Like