அமேசான் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அலெக்சா (Alexa) என்ற, ஸ்மார் டிஜிட்டல் குரல் உதவி கருவியை (Digital voice assistant) அறிமுகம் செய்தது.. இந்தியாவில் அலெக்சா அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஸ்மார்ட் விளக்குகள் உள்ளிட்ட சாதனங்களைக் கட்டுப்படுத்துதல், கிரிக்கெட் ஸ்கோர் பற்றிய ரியல் டைம் அப்டேட்களை வழங்குதல், பிற நிகழ்நேர தகவல்களை வழங்குத என பல வகையில் அலெக்சா உதவி செய்கிறது.. மேலும் உங்கள் தேவைக்கேற்ப வெவ்வேறு கேள்விகளுக்கும் அலெக்சா பதிலளிக்கிறது.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டில் இந்திய பயனர்கள் அலெக்சாவிடம் கேட்ட கேள்விகள் குறித்த விவரத்தை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.. அதில் பலரும் பலவிதமான கேள்விகளை அலெக்சாவிடம் கேட்டுள்ளனர்.. சிலர் தங்களுக்கு உண்மையிலேயே பதில் தெரியாத கேள்விகளை கேட்டாலும், ஒரு சிலர் வேடிக்கையான கேள்விகளை கேட்டுள்ளனர்.. அந்த வகையில் ஒரு பயனர் அலெக்சாவிடம் குளிக்கலாமா வேண்டாமா என்று கேட்டுள்ளார்.. மற்றொருவர் உன் கணவரை பற்றி சொல் என்று அலெக்சாவிடம் கேடுள்ளார்.. மேலும் சில பயனர்கள் பேய்கள் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி மீது நம்பிக்கை உள்ளதா என்று அலெக்சாவிடம் கேட்டுள்ளனர்..
ஆனால் அதே நேரத்தில் இந்தியர்கள் அலெக்சாவிடம் பொது அறிவு தொடர்பான கேள்விகளையும் கேட்டுள்ளனர்.. ட்விட்டரின் நிறுவனர் எலோன் மஸ்கின் நிகர மதிப்பு பற்றிய கேள்விகள் அலெக்சாவிடம் கேட்கப்பட்டன. இது தவிர, சில பயனர்கள் பிட்காயின் விலை மற்றும் தங்கத்தின் விலை குறித்தும் கேட்டனர்.. உலகின் உயரமான நபர் யார், புர்ஜ் கலீஃபாவின் உயரம் என்ன என்று சிலர் கேட்டுள்ளனர்..

மேலும் இந்தியர்கள் அலெக்ஸாவிடம் சமையல் குறிப்புகள் தொடர்பான கேள்விகளையும் கேட்டனர். டீ தயாரிப்பதில் இருந்து உருளைக்கிழங்கு கிரேவி, சிக்கன் பிரியாணி, தோசை மற்றும் பனீர் பட்டர் மசாலா வரை பல்வேறு சமையல் குறிப்புகளைப் பற்றி அலெக்சாவிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.
அலெக்சாவின் கேட்கப்பட்ட சில சுவாரசியமான கேள்விகள் இதோ :
- அலெக்சா, மாடு பச்சை புல்லை தின்னாலும், ஏன் வெள்ளை பால் கொடுக்கிறது..?
- அலெக்சா, உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு உள்ளதா..?
- அலெக்சா, கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்..?
- அலெக்சா, ஆலியா பட்டின் வயது என்ன..?
- அலெக்சா, ஏலியன் இருக்கிறதா..?
- அலெக்சா தண்ணீர் ஏன் ஈரமாக இருக்கிறது..?
- அலெக்சா, ராக்கி பாய் யார்..?
- அலெக்சா, மிக்கி மவுஸின் வயது என்ன..?
- அலெக்சா, எனக்கு கேர்ள் ஃபிரண்ட் வேண்டும்..?
- அலெக்சா, என் வீட்டுப்பாடத்தை நீ செய்கிறாயா..?
- அலெக்சா, ஷாருக்கான் வசனங்கள் பேசு..
- அலெக்சா, தானோஸ் பற்றி சொல்லு..
- அலெக்சா, சோட்டா பீம் பற்றி தெரியுமா..?