ஜே என் 1 வகை கொரோனா மாறுபாடு உலகை அச்சுறுத்திவரும் நிலையில், 72% இந்தியர்கள் மாஸ்க் அணிவதில்லை என்ற தேசிய கணக்கெடுப்பின் ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. JN.1 என்ற துணை மாறுபாடு காரணமாக தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாஸ்க் அணிவது, தனிமைப்படுத்தல், சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், லோக்கல் சர்க்கிள்ஸ் […]

சூடான் நாட்டில் இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனமாக இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சூடான் நாட்டில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே நடக்கும் மோதல் காரணமாக அங்கே இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 1,800 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என அரசு விளக்கம் அளித்துள்ளது. கலவரக்காரர்கள் மருத்துவமனைகள் சூறையாடியதால் மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே நாட்டில் உணவு தட்டுப்பாடு நிலவும் சூழலில் இந்த […]

‌சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் ஃபேர் பிரைஸ் என்ற பல்பொருள் அங்காடியில் இனிப்பு வகைகளை பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவைச் சார்ந்த இஸ்லாமிய தம்பதியரை அங்கிருந்து ஊழியர் ஒருவர் விரட்டியடிக்கப்பட முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த இந்திய தம்பதி தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்தப் பதிவில் அவர் வருகின்ற வாரத்திற்கான மளிகை பொருட்களை வாங்குவதற்காக அருகில் இருந்த ஃபேர் பிரைஸ் சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றோம். அப்போது […]

அமேசான் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அலெக்சா (Alexa) என்ற, ஸ்மார் டிஜிட்டல் குரல் உதவி கருவியை (Digital voice assistant) அறிமுகம் செய்தது.. இந்தியாவில் அலெக்சா அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஸ்மார்ட் விளக்குகள் உள்ளிட்ட சாதனங்களைக் கட்டுப்படுத்துதல், கிரிக்கெட் ஸ்கோர் பற்றிய ரியல் டைம் அப்டேட்களை வழங்குதல், பிற நிகழ்நேர தகவல்களை வழங்குத என பல வகையில் அலெக்சா உதவி செய்கிறது.. மேலும் உங்கள் தேவைக்கேற்ப […]

பாங்காக்கில் இருந்து கொல்கத்தாவிற்கு வந்து கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் பயணிகள் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பாங்காக்கில் இருந்து தாய்லாந்தை சேர்ந்த தாய் ஸ்மைல் ஏர்வேஸ் விமானம் கொல்கத்தா நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு இந்தியர் தன்னுடைய கைப்பையை நடைபாதையில் வைத்து இருந்ததாகவும், மற்றொருவர் அதை மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து விமான பணிப்பெண் […]

இந்தியாவில் ஆண்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமானோர் உட்கொள்கின்றனர் என்பது லான்செட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.. லான்செட் பிராந்திய சுகாதாரம்-தென்கிழக்கு ஆசியா அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது.. அதில் இந்தியாவில் ஆண்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமானோர் உட்கொள்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.. அதிலும், அசித்ரோமைசின் 500 மிகி மாத்திரை இந்தியாவில் அதிகம் நுகரப்படும் ஆண்டிபயாடிக் மாத்திரையாக உள்ளது.. அதிகபட்சமாக 7.6 சதவீதம் மக்கள் இந்த மாத்திரையை பயன்படுத்துகின்றனர் என்றும், அதைத் தொடர்ந்து செஃபிக்ஸைம் 200 […]