மனிதர்களைப் போலவே நம் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளும், புற்றுநோயால் பாதிக்கப் படுகிறது. இதன் அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
புகை, மது உள்ளிட்ட பழக்கங்களால் அதிகளவில் மனிதர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர வேறு சில காரணங்களாலும் மனிதர்களை இந்த நோய் பாதிக்கிறது. இந்தநிலையில், மனிதர்களை போலவே நம் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய், பூனைகளுக்கும் புற்றுநோய் பாதிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. அதாவது, ‘லிம்போமா’ என்ற புற்றுநோய் வகைதான் நாய்கள் மற்றும் பூனைகளின் இடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று தெரியவந்துள்ளது.
பொதுவாக நான்கில் ஒரு நாய் தனது வாழ்நாளில் ஏதோ ஒரு கட்டத்தில் அதன் உடலில் நியோப்ளசியா உருவாகிறது. நியோப்ளசியா என்பது திசுக்கள் மற்றும் செல்களின் அசாதாரண வளர்ச்சியைக் குறிப்பதாகும். தேசிய நாய்க்குட்டி புற்றுநோய் அறக்கட்டளையின் படி ஒவ்வொரு மூன்று நாய்களுக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. 10 வயதிற்கு மேற்பட்ட நாய்கள் புற்றுநோய்யால் பாதிக்கப்படுகின்றன.
மனிதர்களை போலவே நாய்களுக்கும் பலவகையான புற்றுநோய் அறிகுறிகள் உள்ளன. அவை:எக்ஸ் ரேஸ், ரத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை போன்றவற்றைக் கொண்டு வளர்ப்பு பிராணிகளின் மீதுள்ளப் புற்றுநோய் பாதிப்பை உறுதிப்படுத்தலாம். மேலும் வயிறு வீக்கம், வாய் அல்லது மற்ற துவாரங்களில் இருந்து ரத்தம் வடிதல் போன்ற அறிகுறிகளைக் கொண்டுப் புற்றுநோய் பாதிப்பினைக் கண்டறியலாம். சுவாசிப்பதில் அல்லது உணவு உட்கொள்வதில் சிரமப்படுவது, திடீரென எடைக் குறைவது போன்றவற்றைக் கொண்டும் கண்டறியலாம்.
மேலும் புற்று நோயின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது வளர்ப்புப் பிராணிகளின் உடலில் கண்களுக்கு புலப்படும் அளவில் கட்டிகள் உருவாகும். இவற்றைக் கொண்டு புற்றுநோயின் தாக்கம் எந்த அளவில் உள்ளது என்பதைச் சுலபமாக அறிந்துக் கொள்ளலாம். அமெரிக்க கால்நடை உள் மருத்துவக் கல்லூரி (American college of veterinary internal medicine) ‘கால்நடை புற்றுநோயியல்’ (veterinary oncology ) என்ற படிப்பின் கீழ் மருத்துவ மாணவர்களுக்குச் சிறந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.