fbpx

கழுதைப் பாலில் சோப்பு!… பெண்ணின் உடலை என்றென்றும் அழகாக வைத்திருக்கும்!… மேனகா காந்தியின் பேச்சால் சர்ச்சை!

கழுதைப் பாலில் தயாரிக்கப்படும் சோப்பு ஒரு பெண்ணின் உடலை என்றென்றும் அழகாக வைத்திருக்கும் என்ற பாஜக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அத்தொகுதியின் எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கழுதை பால் சோப்பு ஒரு பெண்ணின் உடலை எப்போதும் அழகாக வைத்திருக்கும்” என்று அவர் கூறினார். இந்த பேச்சு குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மிகப் பிரபலமான ராணி, கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளிப்பார். கழுதைப்பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப்புகள் டெல்லியில் ஒரு துண்டுக்கு ரூ. 500. ஆட்டுப்பாலையும் கழுதைப்பாலையும் சேர்த்து ஏன் சோப்பு தயாரிக்கத் தொடங்கக்கூடாது? என்று கேட்டுள்ளார். மேலும் லடாக்கில் உள்ள ஒரு சமூகம் கழுதைப்பாலைப் பயன்படுத்தி சோப்புகளை உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.

நீங்கள் கழுதையைக் கண்டு எவ்வளவு நாட்களாகிறது? எண்ணிக்கை குறைந்து வருகிறது, கழுதைகளை சலவை செய்பவர்களும் கழுதைகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்கள். லடாக்கில் ஒரு சமூகம் உள்ளது, இது கழுதைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் கவனித்ததால் அவர்கள் கழுதைப்பாலைக் கொண்டு சோப்புகளைத் தயாரிக்கத் தொடங்கினர். கழுதைப் பாலால் ஆன சோப்பு ஒரு பெண்ணின் உடலை என்றென்றும் அழகாக வைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

AI தொழில்நுட்ப வளர்ச்சி!... ஐடி ஊழியர்களை பாதிக்கும் அபாயம்?... ZOHO தலைமை அதிகாரி எச்சரிக்கை!

Wed Apr 5 , 2023
ஐடி துறையில் AI தொழில்நுட்ப வளர்ச்சியானது ஐடி மென்பொறியாளர்களை பாதிக்கும் என ZOHO நிறுவன தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு கருத்து தெரிவித்துள்ளார். ஐடி துறை தற்போது அபரிவிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்தின் வருகையில் ஐடி ஊழியர்கள் சற்று கலக்கத்தில் தான் இருக்கிறார்கள் என.கூறப்படுகிறது . காரணம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது நமக்கு எந்த மாதிரியான மென்பொருள்/தேவை […]

You May Like