fbpx

‘ஆதார் எண்ணை பதிவு செய்ய வருவோரிடம் இதை கேட்கக் கூடாது’..!! மின்சார வாரியம் கடும் எச்சரிக்கை..!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை செய்யும் போது பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சார வாரியம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் இருக்கின்றன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்திருக்கிறது. டிசம்பர் மாதம் இறுதிக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றன. இந்நிலையில், மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்வாரியம் சில எச்சரிக்கைகளை விடுத்திருக்கிறது.

ஆதார் எண்ணை பதிவு செய்ய வருவோரிடம் இதை கேட்கக் கூடாது..!! மின்சார வாரியம் கடும் எச்சரிக்கை..!!

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் அடிப்படையில் அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், “மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை செய்யும் போது பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறப்பு முகாமுக்கு வருகை தரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அதேபோல கணினியில் கோளாறு ஏற்பட்டால், மாற்று ஏற்பாடாக கணினிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். காலையில் 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரையில் இடைவெளி இல்லாமல் பணிபுரிய வேண்டும் என்றும் மின்வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

Chella

Next Post

முதல்வரின் தங்கையை காரோடு கட்டித் தூக்கிய தெலங்கானா போலீஸ்..!! பெரும் பரபரப்பு..!! வீடியோ உள்ளே..!!

Tue Nov 29 , 2022
ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.சர்மிளா, காரில் இருந்தபோதே கிரேனில் காரை கட்டி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக சர்மிளா காரில் இருந்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஒய்.எஸ்.சர்மிளா. இவரது சகோதரர்தான் தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் ஜெகன் […]
முதலமைச்சரின் சகோதரி மருத்துவமனையில் அனுமதி..!! உண்ணாவிரதப் போராட்டம்..!! பெரும் பரபரப்பு..!!

You May Like